search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்
    X

    சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

    • போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி
    • நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகவும் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    நகரின் பிரதான சாலை களான கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, செட்டிகுளம் சாலை மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலை யிலும் குழிகள் தோண்டப் பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் சந்திப் பில் சாலை நடுவே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அரசு பஸ் சிக்கியது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை காங்கிரீட் கலவை களால் சரி செய்தனர்.

    இந்த நிலையில் நாகர் கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று இரவு குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதைத் தொடர்ந்து அதிகா ரிகள் அந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உடைப்பை சரி செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக தோண் டப்பட்டு மூடப்பட்ட பகுதி யில் சாலையின் நடுவே மிகப்பெரிய அள வில் பள்ளம் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ஆட்டோ சிக்கியது. மேலும் கார் ஒன்றும் அதில் சிக்கி யது.

    சாலையின் நடுவே கிடந்த பள்ளத்தை தொ டர்ந்து வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க அந்த பகுதியில் சாலையின் ஓரமாக சென்ற னர். சாலையில் பள்ளம் ஏற்பட்டதையடுத்து சாலை ஓரமாக வாகனங்கள் சென் றன. இதனால் அந்த பகுதி யில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. காலை நேரம் என்ப தால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை இரு சக்கர வாகனங்களிலும் 4 சக்கர வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோ ரும் போக்குவரத்து நெருக் கடியில் சிக்கித் தவித்தனர். அரசு பஸ்களும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார் கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலை நடுவே கிடந்த பள்ளத்தை சுற்றியும் கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வேறு வாகனங்கள் சிக்காத வகையில் மரக் கிளைகளையும் பொது மக்கள் முறித்து வைத்துள்ள னர்.

    மாநகராட்சி ஊழியர்கள் உடனடி நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைத்து சாலையை சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகளில் பள்ளங்கள் ஏற்படு வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாதாள சாக்க டைக்காக தோண்டப்பட்ட பிறகு சாலைகள் மூடப்படும் போது சரியான காங்கிரீட் கலவைகள் அமைக்கப்படாமல் சாலைகள் அமைக்கப் படுவது தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் இதில் தனிக் கவனம் செலுத்தி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்படும் பள்ளங் கள் மூடப்படும் போது அதற்கான விதிமுறைக் குட்பட்டு காங்கீரீட் தளம் அமைத்து மூடப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×