என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் பெஸ்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
- 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
- சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மார்த்தாண்டம் :
குமரிக் கலைக்கழகத்தின் சார்பாக, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கி டையேயான கலைத்திறன் போட்டிகள் நாகர்கோ விலில் நடைபெற்றது. அதில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணாக்கர்கள் போட்டியில் பல பிரிவுகளில் முதல் பரிசு பெற்றனர். ஆங்கில பேச்சுப்போட்டியில் 8-ம் வகுப்பு பிரிவில் ஜெரிக் பிரைட் என்ற மாணவனும், தனிநபர் பாடல் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டியில் ஷவின் என்ற மாணவனும், 3 முதல் 5-ம் வகுப்பு பிரிவில் தமிழ் பேச்சுப் போட்டியில் லோபிகா என்ற மாணவியும், குழு நடனப்போட்டியில் மழலையர் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவு மாணாக்கர்களும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குமரிக் கலைக்கழகத் தலைவர் டாக்டர் சண்முகம் தலைமையில் சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணாக்கர்கள் பல குறிப்பிடத்தக்கது. பரிசுகள் பெற்றது சுழற்கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வென்ற மாணவர்களை பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி, முதுநிலை முதல்வரி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி னார்கள்.
இது மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளி க்கொணரும் வகையிலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டி களில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.






