என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்கிள் பந்து போட்டி"

    • வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது
    • இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு பிக்கிள் பந்து அசோசியேஷன் நடத்திய 2 வது மாநில அளவிலான பிக்கிள் பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    3-வது வகுப்பு படிக்கும் மாணவர் அபினித் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். மேலும் இதே பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கும் மாணவர் ஆதர்ஷ் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஆவார். மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் கோவாவில் வைத்து நடைபெற்ற தேசிய போட்டியிலும், கடந்த வருடம் மும்பையில் வைத்து நடைபெற்ற பிக்கிள் பந்து உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.

    ×