search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி - 14-ந்தேதி நடக்கிறது
    X

    மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி - 14-ந்தேதி நடக்கிறது

    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி கள் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப் பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வருகிற 14-ந்தேதி காலை 8 மணிக்கு புத்தேரி-அப்டா மார்க்கெட் அணுகு சாலை யில் நடைபெற உள்ளது.

    13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    போட்டியில் வெற்றி| பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 என்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு விளை யாட்டு அலுவலகம் பொறுப் பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.

    சொந்த சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்க னைகளுக்கு பரிசு தொகை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப் படும். எனவே போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களுடைய வங்கி புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்ப முள்ள மாணவ-மாணவி கள் விதி களை பின்பற்றி புத்தேரி அப்டா அணுகு சாலையில் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×