திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறதுமத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில் :

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் மாணவர் சேர்க்கைக்கும் தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் நல்லபெருமாள், மாநகர செயலாளர் ராஜசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ராஜேஷ், மகளிர் அணி தலைவர் இந்திரா மணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com