என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது
    • வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் இன்று நீட்டுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நாகர்கோவிலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநில நிர்வாகிகள் தாமரை பாரதி, தில்லை செல்வம், பாபு வினி பிரட், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மண்டல தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், பிராங்கிளின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் எழுத்தாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வை ஒழிக்க தி.மு.க. போராடி வருகிறது. நீட்டை ஒழிக்கும் நாள் வரலாற்றின் பொன்னாளாகும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது பாரதிய ஜனதா அரசு தான். அதற்கு துணை நின்றது அ.தி.மு.க. அரசு. தற்போது கவர்னர் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார். ஆனால் தி.மு.க. போராடி வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. கவர்னரின் கூட்டு சதியால் தான் நீட் வந்துள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் அதற்கு தனி கோச்சிங் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.

    நுழைவு தேர்வில் கலந்து கொள்வதற்காக குமரியில் உள்ள மாணவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்கு பண செலவு ஆகும். அதற்காக தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். பிளஸ்-2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவிற்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. கல்வியை வளர்ப்பதற்காக காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் கருணாநிதி திருமண உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்பொழுது புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கல்லூரிக்கு வருவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு தகுதியை குறைப்பதற்கான தேர்வாகும். நீட் தேர்வு லஞ்சத்தை ஒழிக்கவில்லை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. டாக்டர்கள் அதிகமான உள்ளார்கள். எனவே பிரதமர் மோடி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போஸ்ட் கார்டில் கையெழுத்திட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

    • இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
    • 3 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளச்சல் :

    குளச்சல் அருகே தெற்கு பண்டாராவிளை பகுதியில் இந்துஅறநிலைய துறைக்கு சொந்தமான காவு தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று பூஜைகள் முடிந்து வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் எடுத்துச்சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இதேபோல் கூட்டாவிளை அருகே பட்டத்திவிளை இசக்கியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்தும் மர்மநபர் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் குளச்சல் அருகே வெள்ளிப்பிள்ளையார் இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 உண்டியல் கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கோவில் உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து 3 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
    • எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு

    மணவாளக்குறிச்சி :

    தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து 20 மாதங்கள் ஆகிறது. 20 மாதங்கள் ஆகியும் மண்டைக்காடு பேரூராட்சி வார்டுகளில் எந்த வேலையும் நடக்க வில்லை என தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்ற னர்.

    இந்நிலையில் பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி தலைமையில் துணை தலைவர் சுஜி, கவுன்சி லர்கள் முருகன், கிருஷ்ண ஜெயந்தி, விஜயலெட்சுமி, ரமேஷ், ஜெயந்தி, ஆன்ற லின் ஷோபா, லோபிஸ், உதயகுமார், சோணி ஆகிய 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    மாலை அலுவலக நேரம் முடிந்தும் அவர்கள் எழுந்து செல்லவில்லை.

    இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செயல் அலு வலர் கலாராணி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இரவு 10 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், அலுவலக அதிகாரிகள் தொலைபேசி மூலமாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், வார்டுகளில் முக்கிய இடங்களில் நாளை (இன்று) விளக்குப்போடப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
    • வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக உரையும், இரவு பரதநாட்டி யமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன் சென்றது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பி ரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக்காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தள வாய்சுந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
    • கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப் படும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இவற்றை தினமும் கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வருகிற 24- ந்தேதி மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த பரிவேட்டை திருவிழாவில் சுற்றுலா பயணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாநடைபெறும் வருகிற24-ந்தேதி அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நிறுத்துவதால் அன்றைய தினம் பகல் 12மணி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ளவிவேகானந்தர் நினைவு மண்டபமும் மூடப் படும் என்று விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.

    • பூத் கமிட்டி கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    • மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அதிகமான வாக்குகளை பெற நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்கு நாம் கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க தான்.

    மணல் கொள்ளை, அமைச்சர்கள் கைது என்று தி.மு.க. மீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, கோவளம் போன்ற கடற்கரை கிரா மத்தை அ.தி.மு.க. மீண்டும் வென்றெடுத்து கன்னியா குமரி தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கும் பணியை விரை வாக முடிக்க வேண்டும்.

    இவ்வாறு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க செயலாளர் சிவபாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆ.கோ.ஆறுமுகம், முத்துசாமி, பார்த்தசாரதி, தங்க நாடார், வக்கீல்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தென்தாமரைகுளம் பேரூர் கழக செயலாளராக பணியாற்றி வந்த தாமரை தினேஷை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கும், அதற்கு பரிந்துரை செய்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சா வடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து சிறப்பாக பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • தலைவர் லில்லி பாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்
    • சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது

    திருவட்டார் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலமோர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கைகாட்டி பிருந்தாவனம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்து உள்ளது. இதை சரிசெய்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பனிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சாலையை சரிசெய்வதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டபோது இந்த சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. சாலையை சரி செய்ய தமிழக வனத்துறையை சார்ந்த முதன்மை தலைமை வனபாதுகாவலர் சீனிவாஸ் ஆர் ரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை அவர் பரிசீலனை செய்து அனுமதி அளித்தார். இதையடுத்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் லில்லிபாய் சாந்தப்பன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏசுராஜ், ஊராட்சி மன்ற செயலர் சாமுவேல், கவுன்சிலர்கள் சந்திரா ஜெயசீலன், ராணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    • கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு
    • பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்களை ஆய்வு செய்வது மற்றும் உரிமம் பெறாத இடங்களில் பட்டாசு விற்பனை செய்வதை தடுப்ப தற்கும் 18 குறுவட்டங்களுக்கு தாசில்தார்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப் புத்துறை அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட குறுவட்ட ஆய்வாளர்களை கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    குழுவில் அடங்கியுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பகுதி களில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது குழு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள், கையாளப்படு கின்ற நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

    ஆய்வின் போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் செட் அமைத்து விற்பனை செய்வதோ கண்டறி யப்பட்டால் உடனடியாக அத்தகைய விதிமீறல் நடவடிக்கையில் உள்ள பட்டாசுகளை தீயணைப்பு அலுவலர் வழிகாட்டு தலின்படி பறிமுதல் செய்து பாதுகாப்பாக செயலிழக்க செய்வதோடு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற பட்டாசு விற்பனைகள் செய்யப்படு கிறதா என்பதை உறுதி செய்திட கண்காணிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் வருமாறு:-

    பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை. உரிமம் வழங்கப்பட்ட இடத்தை வேறு எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடக் கூடாது. அவசர காலங்களில் வெளியேறும் வாசல் வெளிப் புறமாக திறக்கக்கூடியதாகவும், காற்றோட்டமாக உள்ளதாக இருக்கப்பட வேண்டும். அவசர வெளியேறும் பகுதி களை தொடர்ந்து தற்காலிக கொட்டகை அல்லது ஷெட்களுக்கு அனுமதி இல்லை. அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதை யில் எந்த வெடிபொருள்களும் இருப்பு வைப்பதோ தடைகளோ இல்லாமல் இருக்க வேண்டும். அலங்கார விளக்குகள், தொங்கு விளக்குகள், கடை களின் மேல் அல்லது கட்டி டங்களில் நுகர்வோர்களை கவர்வதற்காக வைக்கப்படும் நிகழ்வுகளில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள தால் அவற்றினை விற்னை யாளர்கள் தவிர்த்திட வேண்டும். குளிர்சாதன பெட்டி, ஆசிட் திரவம் கொண்ட பேட்டரி, டீசல் ஜெனரேட்டர், அகர்பத்தி எண்ணெய் விளக்குகள் ஆகி யவற்றை பட்டாசு விற்பனை அல்லது தயாரிக்கும் இடங்க ளில் பயன்படுத்தக் கூடாது. சிறிய குழந்தைகள், மது அருந்திய நபரை மனரீதியாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்களை வெடி பொருட்களை ஏற்றுவதற்கு இறக்குவற்கு பயன்படுத்தக் கூடாது.

    வெடிபொருட்கள், பட்டாசு பொருட்களை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற அனுபவமுள்ள நபர்களை விற்பனை அதிகமில்லாத நேரங்களில் பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்திட வேண்டும். பட்டாசு பொருட் களை ஏற்றுவதற்கு முன் பட்டாசுகளின் அபாயகரமான தன்மை குறித்து நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற நபர்கள் தானா என்பதை உறுதி செய்திட வேண்டும். மின் வயர்களோ, கேபிள்கள் ஸ்விட்களோ இடைநிறுத்தப்பட்டவாறு இருக்க கூடாது. இவை குழாய்களாக சுவர்களுக்குள் உறுதியானதாக இருக்க வேண்டும். உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசு பொருட்கள் இருக்க கூடாது. கடைபிடிக்கப்பட வேண்டிய விதி எண் 11-ன் படி பட்டாச பொருட்கள் இருப்பு பதி வேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன பொருட்கள், பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எதுவும் படாசு விற்பனை கடையில் இருப்பு வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. இது உரிமத்தின் (படிவம் எல்.இ.5) படி தடைசெய்யப்பட்டுள்ள தாகும்.

    பட்டாசுகள் அனுமதிக்கப் பட்ட உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். மின்சார மெயின் மீட்டர், சர்க்யூட் பிரேக்கர் போன்றவை பட்டாசு கடைக்கு வெளிப் பக்கம் இருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்குகள், தண்ணீர் வாளிகள் மற்றும் மணல் வாளிகளை தேவையான எண்ணிக்கையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பரிசுப் பெட்டிகள் தயா ரிப்பது கடையின் உள்பகுதியிலோ அருகிலுள்ள கடையிலோ கடைபகுதியிலோ எங்கும் மேற்கொள்ள கூடாது. புகைப்பிடித்தல் கூடாது. "பட்டாசு விற்பனை கடை முன்பு பட்டாசு வெடிக்க கூடாது" என்ற வாசகம் கொண்ட எச்சரிக்கை பலகை அல்லது பேனர் பொதுமக்கள் அறியும் வண்ணம் கடைகளின் முன்பு வைக்கப்பட வேண்டும். வெடிபொருட்கள் விதி 2008-ன் படி அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தயாரிப்பாளர்க ளிடமிருந்து ஒப்புதலளிக் கப்பட்ட முத்திரையுடைய பெட்டிகளையே பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க வேண்டும். டிரக், கார் போன்ற வாகனங்களை பட்டாசு விற்பனை கடை அருகில் நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மேற்படி வாகனங்களை இயக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும்போது அனைத்து மின் இணைப்புக ளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்ட றியப்பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. அவசர கால எண் 112-ஐ பொதுமக்கள் அவசர தேவைக்கு பயன் படுத்தலாம்.

    பாதுகாப்பாக இருந்து மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்து அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து விபத்தில்லா மாசில்லா பண்டி கையை பொதுமக்களுக்கும், உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்களுக்கும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

    • நாகர்கோவிலில் 27-ந்தேதி நடக்கிறது
    • மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாகர்கோவி லில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை நேரில் வழங்கலாம்.

    பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
    • மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வேண்டும்

    கருங்கல் : 

    கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கமிட்டி கூட்டம் வட்டார கமிட்டி உறுப்பினர் றசல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் சாந்தகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் ஜாண்றோஸ், சோபனராஜ், குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சுண்டவிளையில் செயல்பட்டுவரும் கருங்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் வருகையை உறுதிபடுத்த வலியுறுத்துவது. மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வைப்பதோடு, அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகாதார துறையையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கரைக்கு வந்த குழந்தைகள் அப்பாவை காணாததால் சத்தமாக அழுதுள்ளனர்.
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே பனச்சக்குழி மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜில் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். விஜில் களியக்காவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை விஜில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டு அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

    மேலும் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறி 2 குழந்தைகளுடன் குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தைகள் கரைக்கு வந்துள்ளனர். ஆனால் விஜில் கரைக்கு வரவில்லை. விஜில் குளத்தில் மூழ்கினார். விஜில் போதையில் இருந்ததால் கரைக்கு வரமுடியாமல் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கரைக்கு வந்த குழந்தைகள் அப்பாவை காணாததால் சத்தமாக அழுதுள்ளனர்.

    குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினர் குளத்தில் இருந்து விஜிலை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விஜில் உடல் பிரேத பரி சோதனைகாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த வருவாய் துறையினர்
    • கடத்தல் காரை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    களியக்காவிளை :

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தி லிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜ சேகர் தலைமையில் வரு வாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றார். உடனே அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கல்லுவிளை பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×