என் மலர்
கன்னியாகுமரி
- போலீஸ் துணை சூப்பிரண்டு தகவல்
- பரி வேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவில் நாளை மறு நாள் (செவ்வாய்கிழமை) பரிவேட்டை திருவிழா நடக்கி றது. இதையொட்டி கன்னியா குமரியில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும்.
இதேபோல் கன்னியா குமரியில் இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவில் செல்ல வேண்டும். பகவதி அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அம்மன் வாகனம் விவேகானந்தபுரம் சந்திப்பை கடக்கும் வரை நெல்லையில் இருந்து வரும் பஸ்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணி மனை வரைவந்து திரும்பி செல்ல வேண்டும்.
அம்மன் வாகனம் விவே கானந்தபுரத்தை கடந்து சென்ற பிறகு நெல்லையில் இருந்துஅஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் விவேகானந்த புரம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும்.
இந்த போக்குவரத்து மற்றும் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் பரி வேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த தகவலை கன்னியா குமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.
- நாளை மறு நாள் நடக்கிறது
- நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் ஆன்மீக அருள் உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி களும் இரவில் வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கி றது.
இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10-30மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்ட பத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலிக் கும்நிகழ்ச்சி நடக்கிறது.அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து மகா தானபுரம் நோக்கி அம்ம னின் பரிவேட்டை ஊர்வ லம் தொடங்குகிறது.
இந்த ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை செல்கிறது. அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து செல்கிறார்கள். மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கேரளப் புகழ் தையம் ஆட்டம், பஞ்ச வாத்தியம், கயிலை வாத்தி யம், நாதஸ்வரம், பஜனை, சிங்காரிமேளம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், சிலம்பாட்டம் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் தெய்வங்களின் வேடம் அணிந்த மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன.
இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப் படும் அம்மனின் பரி வேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலையசந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அளிக் கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதிஅம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவா மிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்க புரம் பகுதிக்கு செல்கிறது. வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடு கிறார்கள்.
பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.அங்குவைத்து அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும்அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழி யாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோ வில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரி வேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக 500-க் கும்மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பரிவேட்டை திரு விழாவையொட்டி கன்னியா குமரியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாகர்கோ வில், கொட்டாரம், அஞ்சு கிராமம், கன்னியா குமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திரு விழா நடக்கும் மகாதான புரத்துக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ் தீஸ்வரம், கொட்டா ரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுலா தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு
- போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் :
ஆயுத பூஜை விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்க னவே கடந்த 8 நாட்களுக்கு முன்பு நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வீடு களிலும், கோவில்களிலும் வழிபாடு நடத்தி வருகி றார்கள்.
நாளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேப்பமூடு பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்க ளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயுத பூஜை யையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளனர். நிகழ்ச்சிகள் நடத்தும்போது போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜை விழா தொடர் விடு முறையையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். எனவே சுற்றுலா தலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற் கொண்டார். அங்கு பாதுகாப்பை அதி கரிக்கவும் அவர் அறி வுறுத்தினார்.
வெளியூர்களில் இருந் தும் பஸ்கள் மற்றும் ரெயில்க ளில் ஏராளமான பொது மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ள னர். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வரு கிறது. பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் போலீ சார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். கடை வீதிக ளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பூஜைக்கு தேவை யான காய்கனிகளை பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
எனவே மார்க்கெட்டு களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாகர் கோவில் அப்டா மார்க்கெட், கனகமூலம் சந்தை மற்றும் மார்த்தாண் டம், தக்கலை, குளச்சல், குலசேகரம் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வெள்ள ரிக்காய், பீன்ஸ், சேனை, உள்ளி, பல்லாரி விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. இதேபோல் வாழைத் தார்கள் விலையும் இன்று அதிகமாக இருந்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் கடைவீதிகளில் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடை வீதிகளில் சந்தேகப்ப டும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் போலீ சாருக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
ஓடும் பஸ்களில் பெண் கள் கூட்டத்தை பயன் படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வரு கிறார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையு டன் இருக்குமாறு அறிவுறுத்தி யுள்ளனர்.
- தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை
- இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
ஆரல்வாய்மொழி :
தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதிகளில் இருந்து கேந்திபூக்களும் நெல்லை மாவட்டம் பழவூர் உள்பட பல்வேறு பகுதிக ளில் இருந்து பிச்சி, மல்லிகை பூக்களும் அதி களவு விற்பனைக்கு வருகி றது.
மேலும் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.
இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியி ருந்தது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு ஆயுத பூஜையையொட்டி ஏராள மான வியாபாரி களும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்த தால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொ டர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீ சார் கண்காணித்து அவர் களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதை தகரா றில் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலெக்டருக்கு பரிந்து ரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட் டுள்ள இசக்கிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த இசக்கிமுத்து பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (20). இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே பூதப்பாண்டி போலீசில் வழக்கு உள்ளது. வினேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.
இதையடுத்து நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டு இருந்த வினேசை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
- மக்களுக்கு நல்ல சைவ உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய ஓட்டலை தொடங்கியுள்ளோம்
- திங்கட்கிழமை முதல் மதிய உணவு ரூ.120-க்கு வழங்கப்படுகிறது
நாகர்கோவில் ;
நாகர்கோவில் எம்.எஸ். ரோட்டில் தொப்பி வாப்பா பிரியாணி கடை அருகில் நாகர்கோவில் ஆனந்த பவன் சைவ ஓட்டல் புதிதாக திறக்கப்பட்டது. இதனை பெல்லா செல்வின் திறந்து வைத்தார். முன்னதாக ஓட்டல் உரிமையாளர் ஜாக்குலின் வரவேற்றார்.
இதுகுறித்து அவரது கணவர் சோனி ஜான்சன் கூறியதாவது:-
நாங்கள் நாகர்கோவிலில் தொப்பி வாப்பா பிரியாணி கடை, மிஸ்டர் ரெட் செப் ஓட்டல் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இட்லி கடை ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.
நாகர்கோவில் மக்களுக்கு நல்ல சைவ உணவு கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இப்போது நாகர்கோவில் ஆனந்த பவன் என்ற புதிய ஓட்டலை தொடங்கியுள்ளோம். இதை எனது மனைவி ஜாக்குலின் நிர்வகித்து வர உள்ளார்.
காலை டிபன், மதியம் 13 வகைகளுடன் சைவ சாப்பாடு இரவு டிபன் மற்றும் இந்திய, தென்னிந்திய உணவு வகைகள், சைனீஸ் கான்டினென்டல் உணவு வகைகள், தந்தூரி சேட்சா வகைகள் சேர்ந்த சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு தயாரித்து பரிமாறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 110 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் தரைத்தளம் முதல் தளம் வசதி உள்ளது. பார்ட்டி ஹால் மற்றும் ஏசி வசதியும் உள்ளது. முதல் 2 நாட்கள் ரூ.99-க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திங்கட்கிழமை முதல் மதிய உணவு ரூ.120-க்கு வழங்கப்படுகிறது. எங்கள் உணவு நிறுவனங்களில் 105 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.
நாகர்கோவில் மக்களுக்கு நல்ல தரமான, ருசியான, ஆரோக்கியமான உணவு வழங்கவேண்டும் என்ப தற்காக இத்தொழிலில் சமூக அக்கறையுடன் கணவன், மனைவியாக ஈடுபட்டுள்ளோம். அடுத்து தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் எங்களது கிளைகளை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.
- வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.
நாகர்கோவில் :
பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையில் உலகதரத் தில் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினக்ஸ்குமார் கூறியதாவது:-
எங்கள் மருத்துவமனையில் உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகதரத்திலான இம்ப்ளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதாவது ஒரு இடத்தில் பல் எடுத்தால், அந்த இடத் தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல் கட்டுவது நல்லது. இன்றைய கால சூழலில் வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த இம்ப்ளான்ட் சிகிச்சை விளங்குகிறது. ஒரு பல் இல்லா இடத்தில் நிரந்தர பல் கட்டுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அருகில் உள்ள பற்களோடு சேர்த்து இல்லாத பல்லை கட்டுவது, மற்றொன்று பல் இல்லாத இடத்தில் இம்ப் ளான்டை வைத்து அதன் மீது பற்களை பொருத்துவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்ப்ளான்ட் பொருத்திய பின் 4 முதல் 6 மாதங்கள் கழித்து தான் பல் கட்ட முடியும். ஆனால் இன்றைய புதிய வகை இம்ப்ளான்டு நவீன சிகிச்சை முறைகள் மற்றும் நவீன உபகரணங்கள் ஆகியவற்றால் இம்ப்ளான்ட் சிகிச்சை அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ளாகவே பல் கட்டிவிடலாம். இந்த சிகிச்சை முறை எவ்வித சிரமமும் இல்லாமல் செய்யலாம். மேலும் அன்னபிளவு சம்பந்தமான அறுவை சிகிச்சைக்கு இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டவரும் எங்களது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.
- கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கிறார்கள்.
- ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்
திருவட்டார் :
குலசேகரம் அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அசின் (வயது 30).
நேற்று மாலை குலசேகரம் சந்தைப் பகுதியில் இருந்து மணியன்குழிக்கு செல்வதற்கு 2 மகள்களுடன் பஸ்சுக்காக காத்து இருந்தார்.
அப்போது மணியன் குழி செல்வதற்கு ஒரு வேன் வந்தது. அதில் ஏறும் போது மர்ம நபர் ஒருவர் அசின் கையில் இருந்த பர்சை அபேஸ் செய்து விட்டார். வேனில் இருந்து இறங்கிய அசின், பர்சை காணாது அதிர்ச்சி அடைந்தார்.
உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பர்சில் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.
அந்த பகுதியில் கடையில் உள்ள கன்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
- பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது
தென்தாமரைகுளம் :
வடக்குதாமரைகுளம் ஸ்ரீஞானமுத்தீஸ்வரர் முத்தா ரம்மன் கோவிலில் 9-வது ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
2-ம் நாள் விழாவான நேற்று காலை நையாண்டி மேளம், ஆற்றங்கரை விநாயகர் சன்னதியில் இருந்து ரத வீதி வழியாக பூ கரகம் எடுத்து வருதல், வில்லிசை, முத்தாரம்மனுக்கு பட்டு எடுத்து வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, வடக்குதாமரைகுளம் ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் மகேந்திரன், அய்யப்பன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டியது
- மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பியது.
மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணை நிரம்பி யதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற் றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்ப தற்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலை யில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் சிற்றாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் படிப் படியாக குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவி யிலும் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கு குறைந்து மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதை யடுத்து 10 நாட்களுக்கு பிறகு குளிப்ப தற்கு விதிக்கப்பட்டி ருந்த தடை நீக்கப்பட்டது.
இன்று அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மானோர் அருவியில் குளிப்ப தற்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.69 அடியாக உள்ளது. அணைக்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 449 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழி கிறது.
முக்கடல் அணை நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. நாளைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். முக்கடல் அணை நிரம்பி வருவதையடுத்து முக்கடல் தண்ணீரை சப்ளை செய்வ தற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 7-ம் திருவிழாவான நேற்று இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாக னத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.
அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜை யும் ஏகாந்த தீபாராதனை யும் நடந்தது.
8-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பொதுப் பணித்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.
மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரையும்நடக்கிறது. இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி யும் நடக்கிறது.
- பாளை ஜெயிலில் அடைப்பு
- கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
நாகர்கோவில், அக்.21-
ராஜாக்கமங்கலம் அருகே விளாத்திவிளையை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜிம் கண்ணன். இவர் மீது ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் கண்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஜெகநாதன் கொலை வழக்கில் கைது கைது செய்யப்பட்ட கண்ணன் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதேபோல் பழவூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் கைது செய்யப்பட்ட கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். பழவூர் போலீசார் கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் பழவூர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை பழவூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கண்ணனை பாளையங்கோட்டை ஜெயில் அடைத்தனர்.






