கவுசிகா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
கவுசிகா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
Published on

நாகர்கோவில்:

தெரிசனங்கோப்பு கவுசிகா பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகிய பாண்டியபுரம் ஜெயந்தீஸ்வர உடைய நயினார் கோவில் மேல்சாந்தி ஜெய்ஸ்ரீ மணிகண்ட ஆச்சார்யார் தலைமையில் குழந்தைகள் அனைவரும் நலம்பெற ஆகம விதிப்படி அதற்கான அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு, சிவ ஆகமரத்தினம் ஜெய்ஸ்ரீ நாராயண சுவாமி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ப்ரி.கே.ஜி.வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஹிந்தி மற்றும் செஸ் வகுப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுசிகா பள்ளியின் தாளாளர் செண்பகநாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com