என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக ஒரே ஆண்டில் நிறைவேற்றியதாக முக ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தியாகதுருகம் சாலையில் உள்ள அம்மா திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளர் மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பின செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னருமான குமரகுரு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது,

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 12 மாதங்கள்தான் ஆகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக ஒரே ஆண்டில் நிறைவேற்றியதாக பச்சை பொய் பேசுகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மின்வெட்டால் விவசாயிகள், நெசவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கி புதிய மாவட்ட கட்டிடம் கட்ட ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். தொடர்ந்து ஒரே ஆண்டில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூ. 385 கோடி ஒதுக்கீடு செய்தோம். தற்போது இந்த மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தோம். மேலும் ஏழை குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்தோம். இதனால் ஆண்டுக்கு 540 மாணவர்கள் மருத்துவம் பயில்கின்றனர்.

    தி.மு.க. வினர் நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும், இளைஞர்கள் கல்வி கடன் ரத்து, முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும், சிலிண்டர் மானியம் வழங்கப்படும், 100 நாள் வேலை 150 நாள் ஆக உயர்த்தப்படும், அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த திட்டங்களான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் பெறுவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட ங்களை மூடுவதில் தி.மு.க. சாதனை படைத்துள்ளது.

    வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, செண்பகவேல், நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தங்க பாண்டி யன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செய லாளர் ஜான் பாஷா, பாசறை தலைவர் பரியாஸ், திருநாவலூர் ஒன்றிய கழக அவைத் தலைவர் முத்துராமன் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் பழனி மலை,, லதா பாலாஜி, ஒன்றிய இணைச் செயலாளர் சரண்யா சிவகுமார் ,ஒன்றிய பொருளாளர் மனோகரன் மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், கொளஞ்சி, சாந்தி ஐயப்பன் திருவெண்ணை நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான இளந்துறை ராமலிங்கம் ஒன்றிய அவைத் தலைவர் தேவநாதன் ஒன்றிய இணைச் செயலாளர் பழனியம்மாள் ஒன்றிய துணைச் செயலாளர்கள் அனிதா, ரகோத்தமன், ஒன்றிய பொருளாளர் பழனி மாவட்ட பிரதிநிதிகள் மலர்விழி, கோதண்டபாணி, கார்த்திகேயன், ,திருவெண்ணை நல்லூர் நகர கழக செயலாளர் காண்டீபன், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தலவாடி பாக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 16 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே பாசார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் சின்னகவுண்டன் (வயது28). இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகவுண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
    சங்கராபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே பாசார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் சின்னகவுண்டன் (வயது28). இவர் 16 வயது சிறுமியை கடத்தி சென்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகவுண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
    சங்கராபுரம் அருகே பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உண்ணாமலை(53). இவரை கடந்த 20ந் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


    உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48) விவசாயி. இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்கள் இருவருக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் 13 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலைக் கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே காய்கறி கடையின் கேட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டையில் திருநாவலூர் செல்லும் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கடையில் உள்ள ஒரு கடையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் கடையின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பெயர் உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூபாய் 10,000 பணத்தை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதை அறிந்தார்.

    இதுகுறித்து ராஜா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து பார்த்தபோது சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையில் கடைக்கு நள்ளிரவில் வந்து கடையின் கேட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவன் யார் எந்த ஊரை சேர்ந்தவன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர், கள்ளக்குறிச்சி அடுத்த குரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் தனது மகள் திருமணத்திற்கு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் முருகேசன் இறந்ததால், அவரது மகள் இந்திரா, தனது தந்தை கொடுத்த பணத்தை தரும்படி சிகாமணியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். கடந்த 25மந் தேதி சங்கராபுரம் வந்து சிகாமணியிடம் பணத்தை கேட்ட இந்திராவை சிகாமணி, அவரது மகன்கள் பாலமுருகன், தாமோதரன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், சிகாமணி (60), பாலமுருகன் (35), தாமோதரன் (32) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகத்தில் மின்வாரியத்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் சமூகநீதி அதற்கான சர்வதேச குடியியல் உரிமைகள் ஆணையம் சார்பில் துணை மின் நிலையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தியாகதுருகத்தில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மின்சார வாரியம் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கபீர்பாஷா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணிகண்டன், மாநில இளைஞர் அதிகார தலைவர் சந்துரு, நகர தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளை ஞரணி தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதை கண்டித்தும், கம்பியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தியாகதுருகம் நகர் முழுவதும் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறுப்பினர்கள் ஜெயவேல், தமிழ்வாணன், வேலு, பிரகாஷ், வினோத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமத் ரபி கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளார்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமத் ரபி கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பிற்குரியது.

    அதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் சங்கராபுரம் பகுதியை சுற்றி அதிகளவு கிராமங்களும், கல்வராயன் மலைப்பகுதிகளும் உள்ளது. இங்குள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு வாய்ப்பாக சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

    தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    உழவர் சந்தை முன்பு சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த கீரை, பழங்கள், காய்கறி உள்ளிட்ட சாலையோர கடை மற்றும் தள்ளுவண்டி கடைகாரர்களிடம் சாலையோரம் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உழவர் சந்தைக்கு முன்பு சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் அப்பகுதியில் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரி டம் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்ராயலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உழவர் சந்தை முன்பு சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த கீரை, பழங்கள், காய்கறி உள்ளிட்ட சாலையோர கடை மற்றும் தள்ளுவண்டி கடைகாரர்களிடம் சாலையோரம் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    எனவே சாலையோர கடைகள் அமைக்க கூடாது. மீறி கடைகள் அமைக்கப்பட்டால் நகராட்சி பணியாளர்கள் மூலம் கடை அப்புறப்படுத்தப்படும் என எச்சரித்தார். முன்னதாக பேருந்து நிலையத்திலுள்ள கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் கழிவறையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது வார்டு கவுன்சிலர் பால்ராஜ் உடனிருந்தனர்.

    வேலைவாய்ப்பு முகாமில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்துள்ள ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அட்மா குழு தலைவர் ஆறுமுகம், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் ராஜா, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் சுகந்தி வரவேற்றார்.

    முகாமில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்துள்ள ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். 23-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு 570 பேரிடம் நேர்காணல் நடத்தினார்கள். இதில் 112 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகி, பாக்கியலட்சுமி, செல்வி, கலா, தனலட்சுமி, சங்கீதா, பூபதி, உதவியாளர் மருதுபாண்டி மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமையிடமான கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. கள்ளக்குறிச்சியை சுற்றி சுமார் 29 கிராமங்கள் இந்த பேரீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமையிடமான கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. கள்ளக்குறிச்சியை சுற்றி சுமார் 29 கிராமங்கள் இந்த பேரீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் நடைபெறும் கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களும், திருட்டு, வழிப்பறி, விபத்துகள், வெளி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தல், மணல் கடத்தல் சம்பவங்கள் குறித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள், சாலைமறியல், போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்தும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஜ.ஜி பாண்டியன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் என்பவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த மாதம் 31- ந் தேதி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் தற்போது தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சுழற்சி முறையில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி, மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள போலீஸ் நிலையத்தில் மாதக்கணக்கில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பிவைக்கும் மனுக்கள் விசாரணை மற்றும் வழக்குகளில் தோய்வு ஏற்பட்டு, சட்டம் ஒழுங்குகளை கட்டுபடுத்துவதற்கும் கடினமான சூழ்நிலை உள்ளது.

    இதேபோல் வரஞ்சரம் போலீஸ் நிலையத்திற்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டரே வட்ட ஆய்வாளர் என்பதால் இந்த காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு 1 இன்ஸ்பெக்டர், 5 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், 73 மற்ற காவலர்கள் ஆக மொத்தம் 79 போலீசார் பணிபுரிய வேண்டும். ஆனால் சுமார் 60 போலீசார் மட்டும் பணியில் உள்ளதாகவும், இதிலும் 30 பேர் அயல் பணிக்காக வெளியில் சென்ற நிலையில் தற்போது 30 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.

    இவ்வாறு மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பணியில் உள்ள நிலையில் சுமார் ஒருமாத காலமாக மாவட்ட தலைமையிடத்தில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

    இது போன்ற நிலையில் நாளுக்கு நாள் குற்றசெயல்கள் அதிகரித்து வருகிறது.

    எனவே கள்ளக்குறிச்சி பகுதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட வடக்கு மண்டல ஜ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உடனடியாக போலீஸ் இன்ஸ் பெக்டர் நியமனம் செய்யவும், அயல் பணிக்காக சென்ற போலீசார் மீண்டும் கள்ளக் குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×