search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்
    X
    போலீஸ்

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் குற்றசெயல்கள் அதிகாரிப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமையிடமான கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. கள்ளக்குறிச்சியை சுற்றி சுமார் 29 கிராமங்கள் இந்த பேரீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமையிடமான கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் உள்ளது. கள்ளக்குறிச்சியை சுற்றி சுமார் 29 கிராமங்கள் இந்த பேரீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் நடைபெறும் கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களும், திருட்டு, வழிப்பறி, விபத்துகள், வெளி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தல், மணல் கடத்தல் சம்பவங்கள் குறித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள், சாலைமறியல், போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்தும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஜ.ஜி பாண்டியன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் என்பவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த மாதம் 31- ந் தேதி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் தற்போது தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சுழற்சி முறையில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி, மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ள போலீஸ் நிலையத்தில் மாதக்கணக்கில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பிவைக்கும் மனுக்கள் விசாரணை மற்றும் வழக்குகளில் தோய்வு ஏற்பட்டு, சட்டம் ஒழுங்குகளை கட்டுபடுத்துவதற்கும் கடினமான சூழ்நிலை உள்ளது.

    இதேபோல் வரஞ்சரம் போலீஸ் நிலையத்திற்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டரே வட்ட ஆய்வாளர் என்பதால் இந்த காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு 1 இன்ஸ்பெக்டர், 5 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், 73 மற்ற காவலர்கள் ஆக மொத்தம் 79 போலீசார் பணிபுரிய வேண்டும். ஆனால் சுமார் 60 போலீசார் மட்டும் பணியில் உள்ளதாகவும், இதிலும் 30 பேர் அயல் பணிக்காக வெளியில் சென்ற நிலையில் தற்போது 30 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.

    இவ்வாறு மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பணியில் உள்ள நிலையில் சுமார் ஒருமாத காலமாக மாவட்ட தலைமையிடத்தில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

    இது போன்ற நிலையில் நாளுக்கு நாள் குற்றசெயல்கள் அதிகரித்து வருகிறது.

    எனவே கள்ளக்குறிச்சி பகுதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட வடக்கு மண்டல ஜ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உடனடியாக போலீஸ் இன்ஸ் பெக்டர் நியமனம் செய்யவும், அயல் பணிக்காக சென்ற போலீசார் மீண்டும் கள்ளக் குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×