என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க் பொன். கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்.
- அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ள க்குறிச்சி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நெடுமானூர் அரசு மேல்நிலை ப்பள்ளி, சங்க ராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பி னரிடம் கோரிக்கை விடுத்தனர். அ த ன்படி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ள க்குறிச்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகபிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அப்துல் கலீல், செயலாளர் கிரி ராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ள க்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் 50 பெஞ்ச், டெஸ்க் வீதம் 4 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் 200 பெஞ்ச், டெஸ்க் வழங்கினார். இதில் மாவட்ட தொ.மு.ச. துணைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் திராவிட மணி, வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்
- கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் வங்கிக்கடன் பெற்று சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்க்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடிய இனத்தைச் சேர்ந்த 210 பேர் தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதி, வாகன கடன்வசதி, சிறு தொழில் செய்ய கடன்வசதி, கால்நடைகள் வளர்ப்புத்தொழில் ஆகியவற்றிற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) இணையதளம் வழியே விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலமாக பல்வேறு கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்து, ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கடனுதவியும், பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும். இந்த கடனுதவிகளை பெறுபவர்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும். அவ்வாறு சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
- கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.
- சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடிகம்பம் சேதம்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனது உறவினர்ளுடன் சின்னாத்தா வீட்டின் அருகில் உள்ள தி.மு.க. கொடிகம்பத்தின் சிமெண்டு கட்டையை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி சின்னாத்தா (வயது 40). அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் பெரியசாமி (37), அவர் தனது உறவினர்ளுடன் சின்னாத்தா வீட்டின் அருகில் உள்ள தி.மு.க. கொடிகம்பத்தின் சிமெண்டு கட்டையை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட சின்னத்தா மற்றும் அவரது கணவர் தனவேல் ஆகியோரை அவர்கள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சின்னாத்தா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, குள்ளன் என்பவரது மகன் பழனிசாமி (53) ஆகியயோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
- அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர் கருக்கன் மகன் அழகேசன் (வயது 48). தொழிலாளி.இவர் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார். மோட்டாம்பட்டி சாலையில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அழகேசன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகசேன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினரால் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தார்.அவருக்கு கள்ளக்கு றிச்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலும் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் அருகிலும் சிறப்பான முறையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், திருநாவலூர் ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல் ,சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, ,உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர்கள் மணிராஜ் ,பழனிவேல், நகர செயலாளர் துரை, திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் காண்டீபன், விநாயகா கல்வி குழுமத்தின் தலைவர் நமச்சிவாயம் ,மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் காந்தலவாடி பாக்கியராஜ், அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வசந்தம்கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்காணிப்பில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இலவச நலத்திட்டங்களை வழங்குவதற்கு தகுதி அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து 100 சதவீதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த செயலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இதுபோன்ற தவறுகள் இனியும் தொடர்ந்து நடைபெற்றால் பாதிக்கப்படும் பயனாளிகள் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
- கள்ளக்குறிச்சியில் மாணவியின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராம த்தைசேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), இவர்க ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் மருத்துவ பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நி லையில் மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி நேற்று முன்தினம் தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் நேற்று இறந்துபோன மாணவி விருத்தாசலம் தொகுதிக்குஉட்பட்டவர் என்பதால் தகவல் அறிந்ததும் விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோ ர்களுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து தனியார் பள்ளியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நியாயமானமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரேத பரிசோதனை முடிவை பொறுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தார்.
இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறிபள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியி ல்பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்க ப்பட்டிருந்த மாணவியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை நிறை வடைந்தது. இருப்பினும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவு தெரியும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளுக்கான ஊனத்தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் பூர்ணிமா, மாவட்ட நலக்கல்வியாளர் அன்புநிலவன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் பொன்னுசாமி, பாலு, ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். முட நீக்கு வல்லுனர் சற்குணம் நோயாளிகளுக்கு ஊன தடுப்புப் பயிற்சியை அளித்தார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட 25 பயனாளிகளுக்கு ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி, காலணி, உணவு உண்ணும் கரண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் தன்னார்வலர் குணதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம் அடைந்தனர்.
- காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோரனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 29) இவர் சம்பவத்தன்று தனது உறவினர்கள் அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியயோருடன் விவசாய நிலத்துக்கு மின் மோட்டார் வாங்குவதற்கு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தியாகதுருகம் புறவழிச் சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி அருகே சென்ற போது காருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி, காரை முந்தி சென்ற போது காரின் பக்கவாட்டில் உரசியதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த செந்தமிழ்ச்செல்வன், அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து எந்த லாரி மோதியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
- புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறுச்சி:
சங்கராபுரம் அருகே ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் குமரேசன் (வயது 19). இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ரெட்டியார்பாளையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவில் எதிரில் இருந்த ஜல்லிகள் மீது இருசக்கர வாகனம் ஏறியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த குமரேசன் சேலம் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிலர் செய்த சதியால் கடந்த தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
- அந்த தடைக்கற்களை தற்போது உடைத்தெறிந்துள்ளோம்.
திருவெண்ணைநல்லூர்:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் புறப்பட்டு சென்றார்.
வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த அ.தி.மு.க.வை இன்று துரோகிகள் ஒழித்துக்கட்ட பார்க்கிறார்கள். அழித்து விட நினைக்கிறார்கள். அது நடக்காது.
சிலர் செய்த சதியால் கடந்த தேர்தலில் நாம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அந்த தடைக்கற்களை தற்போது உடைத்தெறிந்துள்ளோம்.
துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு நாம் கோவிலாக நினைக்கும் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் கொதித்து போய் இருக்கிறான். காவல் துறையும் துரோகிகளுக்கே துணை போய் கொண்டிருக்கிறது.
சீல் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தனி நபர் சொத்து கிடையாது. புரட்சித் தலைவர் உங்களுக்காக விட்டுச் சென்றுள்ள சொத்து. துரோகிகளின் செயலுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார். அவரது கனவு, சூழ்ச்சி எடுபடாது. அவரை நம்பி யாரும் சென்று காலத்தை வீணாக்காதீர்கள். எனவே ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






