தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம்

தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தியாகதுருகம் புறவழிச்சாலையில்  சாலை ஓர பள்ளத்தில்  கவிழ்ந்த கார்-2 பேர் காயம்
Published on

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோரனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 29) இவர் சம்பவத்தன்று தனது உறவினர்கள் அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியயோருடன் விவசாய நிலத்துக்கு மின் மோட்டார் வாங்குவதற்கு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தியாகதுருகம் புறவழிச் சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி அருகே சென்ற போது காருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி, காரை முந்தி சென்ற போது காரின் பக்கவாட்டில் உரசியதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் காரில் வந்த செந்தமிழ்ச்செல்வன், அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து எந்த லாரி மோதியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

X

Maalai Malar
www.maalaimalar.com