என் மலர்
கள்ளக்குறிச்சி
- நீர்வரத்து அதிகரிப்பு கோமுகி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்தது.
- பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்க ப்பட்டது. தற்போது கோமுகி அணை யில் 20 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள தடுப்பணைகள் தண்ணீர் நிரம்பி கொட்டுகிறது இதனால் கல்வராயன்மலை அடி வாரமான கல்படை .பொ ட்டியம் .ஆகிய ஆறுகளின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி நீர் வரை கோமுகி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 20 அடியில் இருந்து தற்போ து 40அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து கோமுகி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் கோமுகி அணையின் நீர்மட்டம் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 44 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.
- வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட கல்வராயன்மலையில் 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு. தாழ்தும்பராம்பட்டு.. காட்டுகொட்டாய் என மூன்று கிராமம் உள்ளது இந்த 3 கிராமத்திலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த 3 கிராமத்திற்கும் செல்ல வேண்டுமென்றால் தும்பராம்பட்டு கிராமத்தில் ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்துதான் 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் இதனால் ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள். இந்த 3 கிராமத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் சென்று வரும் இந்நிலையில் இந்த தரைபாலம் கடந்த ஒரு வருடம் முன்பு பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு ஒத்தையடி பாதை வழியாக சென்று வந்தார்கள். இதனால் மூன்று கிராமத்திற்கு செல்லக்கூடிய ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் கூட அந்த கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஒரு வருட காலமாக பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சேதமடைந்த பாலம்் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்காக காலையிலே 9 மணிக்கு அந்த மூன்று கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தினந்தோறும் தும்பரம்பட்டு ஆற்றுக்கு வந்து அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு கற்கள் சிமெண்ட் பைப்புகள் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே போட்டு தற்காலிகமாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளை நம்பியது போதும் அதனால் களத்தில் நாமலே இறங்கலாம் என்று அப்பகுதி மக்கள் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது தற்காலிக பாலம் தான் தவிர நிரந்தரம பாலம் அல்ல எங்களுக்கு புதிதாக மேம்பாலம் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சின்னசேலம் அருகே கார் விபத்தில் சிக்கியதால் 2 பேர் காயம்
கள்ளக்குறிச்சி:
சென்னையை சேர்ந்தவர்கள் கணேஷ் (வயது 30), சந்தோஷ் (28), விக்னேஷ் (30), மணிகண்டன் (23,) இவர்கள் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். வாசுதேவனூரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. பின்பு சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பத்தினர் காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரை பத்திரமாக மீட்டனர். அதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த 2 பேரையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்கள். மற்ற 2 பேரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
- சின்னசேலம் தனியார் பள்ளியில் இருந்து 180 மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர்.
- மாணவி உயிரிழந்த 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக பள்ளியில் நடந்த வன்முறையில் பள்ளிக் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.இந்த வன்முறையில் மாணவ ர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் சேதம டைந்தன. இதனால் பள்ளி யில் படித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக் குறியானது. மாணவி உயிரிழந்த 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, கடந்த 1-ந் தேதி முதல் 9 முதல் பிளஸ் -2 வகுப்புகள் வரை வேறொரு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கி, நடைபெற்றுவருகிறது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை 2,000 மாணவ மாணவிகள் தங்களுடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டும், சாதி சான்று வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக, 180 மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்க ளின் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகி ன்றனர். மேலும் மாணவ, மாணவிகள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பள்ளிகளில் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் மற்றும் தபால் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மந்தைவெளியில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம், குறைத்திடு குறைத்திடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் மறறும் விலைவாசி உயர்வை குறைத்திடு, போடாதே, போடாதே, காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்டத் தலைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 53 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயமானார்.
- அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39) விவசாயி. அவரது மகள் பொன்னி (வயது14) இவர் புக்கிரவாரி யில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். அதிகாலை 3:30 மணி அளவில் அவருடைய தந்தை அய்யப்பன் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதனால். அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார். இதனால் சந்தேகம் அடைந்த அய்யப்பன் கீழ்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பொன்னி என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சின்னசேலத்தில் சாலை மழையால் குளமாக மாறியது.
- பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன சேலம் மற்றும அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன சேலம் மற்றும அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பருவ நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று பெய்த கன மழையால் மணிவண்ணன் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் செல்வதற்கு சிரமப்பட்டனர். மழை வரும்போதெல்லாம் மணிவண்ணன் மருத்துவமனை அருகே குளம் போல் மழைநீர் தேங்கி சாலை சேதம் அடைகிறது. இதனால் பலமுறை விபத்துகள் நேரிடுகிறது. விபத்துகளை தடுக்க இந்தப் பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- திருநாவலூர் அருகே பாலத்தில் இருந்து கொத்தனார் தவறி விழுந்தார்.
- தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார்.
கடலூர்:
திருநாவலூர் அருகே உள்ள சோமாசி பாளை யத்தை சேர்ந்தவர் புகழேந்தி. கொத்தனார். இவர் தேவிநந்தல் பஸ்நிலையம் அருகே பாலத்தில் உள்ள தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.
- உளுந்தூர்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரகோத்தம்மன். அவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாக 6 மாதம் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காயத்திரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய காயத்திரி அலறிதுடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் உடனே காயத்திரி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கள்ளக்குறிச்சியில் ரூ.3.06 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தாசில்தார் அலுவலகம் மிக வும்பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் புதிய வட்டா ட்சியர் அலுவலகம் கட்ட ரூ. 3 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தரைதளத்தில் காத்திருப்போர் கூடம், வருவாய் வட்டாட்சியர் (சமூக நலம்), அலுவலக அறை, தபால் வாங்குதல் மற்றும் அனுப்புதல் அறை, கணினி அறை, கழிவறை ஆகியஅறைகளும், முதல் தளத்தில் வருவாய் வட்டாட்சியர் அறை, வட்டாட்சியர்கள் ஆதிதி ராவிடம் மற்றும் வட்ட வழ ங்கல் அறை, அலுவலக அறை ஆகியவைகளும், 2-வது தளத்தில் பதிவறை, அலுவலக அறை, கூட்ட அறை, நில அளவை பிரிவு ஆகிய அறைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்தது. இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜய பிரபாகரன், குடிமை பொருள் தாசில்தார் வெங்கடேசன், ஆதிதிராவிட தனி தாசில்தார் நடராஜன், பாதுகாப்பு தனி தாசில்தார் மணிகண்டன், ரயில்வே தனி தாசில்தார் கமலம், வருவாய் ஆய்வாளர்கள் பாலு, சுகன்யா, ராமசாமி, ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
- கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு, கள்ளக்குறிச்சி 6, தியாகதுருகம் 9, விருகாவூர் 15, சின்னசேலம் 10, அரியலூர் 2, கடுவனூர் 3, கலையநல்லூர் 22, கீழ்பாடி 4, மூரார்பாளையம் 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 22, சூளாங்குறிச்சி 2, வடசிறுவலூர் 16, மாடாம்பூணடி 7, மணலூர்பேடடை 0, திருக்கோவிலூர் 4, திருப்பாலபந்தல் 11, வேங்கூர் 5, ஆதூர் 2.5, எறையூர் 0, ஊ.கீரனூர் 16, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கலையநல்லூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் 22 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக அரியலூர் மற்றும் சூளா ங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 2 மி.மீட்டர் மழையும் பெய்து ள்ளது. மேலும் கள்ள க்குறிச்சி மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 176.5 மி.மீட்ட ராகவும், சராசரி 8.40 மி.மீட்டர் அளவா கவு ம் உள்ளது.
- பிளாஸ்டிக் பைகளை வடிகால் வாய்க்காலில் போடுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற தூய்மைப் பணிகளையும், கா.மாமனந்தல்சாலையில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், கா.மாமனந்தல் சாலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவரும் களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள வடிகால் வாய்க்கால், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், வடிகால் வாய்க்கால்களில் நெகிழிப் பைகளை போடுபவர்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை உரப்பூங்கா, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு, அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






