search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் கல்வராயன்மலையில்  3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
    X

    கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சேதமடைந்த பாலம்  அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் கல்வராயன்மலையில் 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

    • வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட கல்வராயன்மலையில் 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு. தாழ்தும்பராம்பட்டு.. காட்டுகொட்டாய் என மூன்று கிராமம் உள்ளது இந்த 3 கிராமத்திலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த 3 கிராமத்திற்கும் செல்ல வேண்டுமென்றால் தும்பராம்பட்டு கிராமத்தில் ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்துதான் 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் இதனால் ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள். இந்த 3 கிராமத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் சென்று வரும் இந்நிலையில் இந்த தரைபாலம் கடந்த ஒரு வருடம் முன்பு பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு ஒத்தையடி பாதை வழியாக சென்று வந்தார்கள். இதனால் மூன்று கிராமத்திற்கு செல்லக்கூடிய ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் கூட அந்த கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஒரு வருட காலமாக பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சேதமடைந்த பாலம்் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்காக காலையிலே 9 மணிக்கு அந்த மூன்று கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தினந்தோறும் தும்பரம்பட்டு ஆற்றுக்கு வந்து அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு கற்கள் சிமெண்ட் பைப்புகள் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே போட்டு தற்காலிகமாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளை நம்பியது போதும் அதனால் களத்தில் நாமலே இறங்கலாம் என்று அப்பகுதி மக்கள் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது தற்காலிக பாலம் தான் தவிர நிரந்தரம பாலம் அல்ல எங்களுக்கு புதிதாக மேம்பாலம் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×