என் மலர்
கள்ளக்குறிச்சி
- உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தேன்மொழி புகார் செய்தார்.
- 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (வயது28). இவருக்கும், அதே கிராமத்தில் வசித்து வரும் தாமரைசெல்வி (25) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறுஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பை சேர்ந்தவர்களும் தகாதவா ர்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் தேன்மொழி புகார் செய்தார். அதன் பேரில் தாமரைசெல்வி, சுமதி ஆகிய 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதே பிரச்சினை தொடர்பாக சுமதி கொடுத்த மற்றொரு புகாரின்பேரில் மகேந்திரன், தேன்மொழி, பெரியநாயகி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பபோது பலத்தமழை பெய்தது.
- சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி:
காளசமுத்திரம் , தத்தா திரிபுரம், குரால், பாக்கம்பாடி, நயினார்பாளையம், ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த மழையின் காரணத்தினால் விவசாயிகள் வயல்களில் உழவு பணி மும்முரமாக செய்து வருகின்றனர்.மானாவாரி நிலங்களில், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், சின்னவெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் பெய்துள்ள மழை காரணமாக வயல்களில் உழவு, விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
- அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
கள்ளக்குறிச்சி:
அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ஓடியந்தல், கடம்பூர், ஏந்தல், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமந்தூர், அரும்பராம்பட்டு, கடுவனூர், வடபொன்பரப்பி, கரையாம்பாளையம், மரூர், பெரியபகண்டை, ரெட்டியார்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்
- தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
- சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கொங்கு தனியார் மண்டபத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முழுமையான4 வழி சாலையாக மாற்றக் கூறி நடை பயணம் சின்ன சேலத்தில் நடந்தது. சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் நீளம் உள்ள 9 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழி சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை எனவே தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்னிறுத்தி நடை பயணம் நடைபெற்றது.
- சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர்.
- போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.
- அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்ட தும் சூதாட்டத்தில் ஈடுப ட்டவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த ரூ.1300 பணம் மற்றும் 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் தியாகதுருகம் சந்தை மேட்டு பகுதியை சேர்ந்த சரவணன், நரிக்குறவர் தெருவை சேர்ந்த காமராஜ், கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், சிக்காடு கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை, பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், அந்தியூர் கிராம த்தைச் சார்ந்த ஆலன் மற்றும் சிலர் தப்பி ஓடியது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியானார்.
- பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 70). இவர் லாலாபேட்டையில் இருந்து லா.கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லா.கூடலூர் காலனியை சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (19) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பெரியதம்பி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பெரியதம்பி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 55). இவர் தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவில் தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே சென்றபோது லேசான காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த 50 ஆண்டுகள் பழ–மை–யான புளிய மரம் திடீரென ஷேர் ஆட்டோவின் மீது சாய்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மரக்கிளைகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா, தீயணைப்பு வீரர் கார்த்தி–கேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரக்கி–ளையை அப்புறப்ப–டுத்தி ஷேர் ஆட்டோவை வெளியே எடுத்தனர். சாலையோரம் இருந்த புளியமரம் ஷேர் ஆட்டோ–வில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
- விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் திருநாவலூர் அருகே கிழக்குமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு திரும ணம் ஆகி மனைவி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்து வந்து ள்ளார்.
இதனை அடுத்து நேற்று கிழக்கு மருதூர் அருகே சிவா பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா கரன் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று சிவ குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
- புகாரில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்தனர்.
அப்போது 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல் வந்த போது 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா, அ.தி.மு.க. நகர செயலாளரும், 15-வது வார்டு கவுன்சிலருமான பாபு ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
அப்போது ஞானவேலிடம், நீங்கள் எப்படி எங்களது குடும்பம் பற்றி ஆபாசமாக பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என்று கூறி தட்டி கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் பயங்கரமாக ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதனையறிந்த மற்ற கவுன்சிலர்கள் ஓடிவந்து தகராறை விலக்கினர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க. செயலாளர் பாபு, அவரது மகன் கவுதம், கவுன்சிலர் யுவராணி, அவரது கணவர் ராஜா ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனையறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு, முன்னாள் எம்.பி. காமராஜ், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அய்யப்பா, தேவேந்திரன், ராஜசேகர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
இது குறித்து போலீசாரிடம் நியாயம் கேட்டனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பாபு, யுவராணி மற்றும் ராஜா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கவுதம் மட்டும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு, விஷ்ணு மற்றும் சிலர் தாக்கியதாக கூறியுள்ளார்.
அதனடிப்படையில் அ.தி.மு.க. கவுன்சிலர் பாபு உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
- வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்திக் கொண்டு வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் மற்றும்போலீசார் விரைந்துசென்றனர்.
அப்போது வாகனத்தை மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறிப்பிடத்தக்கதாகும். வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.
- விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
- இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வட பொன் பரப்பி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, சேகர், கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள். இவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காணங்காடு எல்லைக்குட்பட்ட பகுதி யில் விவசாயிகள் விவ சாயத்திற்கு பயன்படுத்தும் மின்மோட்டோர்களின் விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாசனம் செய்ய முடியாமல் செய்வதறியாது பாதிப்படைந்துள்ளனர். திருடி சென்ற மின் வயர்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வடபொன் பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாய நிலங்களில் மின் வயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாய நிலங்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.






