சங்கராபுரம் அருகே விவசாய நிலங்களில் மின் வயர்கள் திருடும் கும்பல்

விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சங்கராபுரம் அருகே விவசாய நிலங்களில் மின் வயர்கள் திருடும் கும்பல்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வட பொன் பரப்பி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, சேகர், கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள். இவர்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் காணங்காடு எல்லைக்குட்பட்ட பகுதி யில் விவசாயிகள் விவ சாயத்திற்கு பயன்படுத்தும் மின்மோட்டோர்களின் விலை உயர்ந்த சுமார் 1000 மீட்டருக்கும் மேற்பட்ட மின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாசனம் செய்ய முடியாமல் செய்வதறியாது பாதிப்படைந்துள்ளனர். திருடி சென்ற மின் வயர்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வடபொன் பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாய நிலங்களில் மின் வயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாய நிலங்களிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com