என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே குடோனில் 3½ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிச்சத்திரம் அருகே உள்ள துலுக்கந்தண்டலம் பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப் படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மூட்டை, மூட்டையாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    மொத்தம் 3½ டன் புகையிலை இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர் திருப்பதி என்பவர் தலை மறைவாகிவிட்டார். அவரது சகோதரன் மோகனை கைது செய்தனர்.

    குட்கா கிடைத்தது எப்படி? எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடோனில் 3½ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அதேபோல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 47

    ஸ்ரீபெரும்புதூர் - 49.90

    செய்யூர் - 22.30

    திருக்கழுக்குன்றம் - 64.20

    மகாபலிபுரம் - 49.20

    திருப்போரூர் - 31.07

    வாலாஜாபாத் - 14.50

    திருவள்ளூர் மாவட்டதில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்து வரும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருவள்ளூர் நகரில் எம்ஜிஆர் சிலை, ஜெயா நகர் செல்லும் சாலை, பஜார் வீதி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையினால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி 57 அம்பத்தூர் - 51

    பூந்தமல்லி - 43

    திருவள்ளூர் - 41

    ஆர்.கே.பேட்டை - 15

    மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான 4 மாடுகள் நேற்று இரவு 11 மணிக்கு அதே தெருவில் சென்றது. அப்போது உயர் அழுத்த மின்வயர் திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 4 மாடுகளும் பலியாகின.

    மாமல்லபுரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    மாமல்லபுரம்:

    நெய்வேலி தைரியத்தை சேர்ந்த பழனிவேல் மகன் அருண் பிரகாஷ் (வயது 24). இவர் ஓரகடத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையோரம் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு முகத்தை கல்லால் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கொலை பற்றி துப்பு துலக்க மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.ஜ. முத்துக் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஒரே பெண்ணை இருவர் காதலித்து வந்ததால் வாக்கு வாதம் ஏற்பட்ட உரையாடல் கண்டுபிடிக்கபட்டது.

    அந்த நபர் காதலித்து வந்த பெண் யார்? என தனிப்படை விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்த இடத்தில் பைக் ஒன்று கிடந்தது. போலீசார் கைப்பற்றி விசாரித்த போது அது திருட்டு பைக் என தெரிந்தது.

    பைக்கில் வந்தவர்கள் கூலிப் படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #Murder

    துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport #GoldSmuggling
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது துபாயில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்து, அங்கிருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அவர்கள், மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்தூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 40) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர்.

    அவரிடம் இருந்த சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறை அமைத்து அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அதில் சிறியது, பெரியது என 14 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார்.

    இந்த தங்க கட்டிகளை அவர் யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் கைதான முகமது ஆரிப்பிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #ChennaiAirport #GoldSmuggling
    கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலியை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் நெய்வேலியை சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் அவரை கடத்தி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கொலையுண்ட அருண்பிகாஷ், என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னை ஒரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அந்த கட்டுமான நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை பார்த்த அவர் இங்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இதுபோல் அருண் பிரகாஷ் வந்து சென்ற போது தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    இது கொடர்பாக அருண்பிரகாசிடம் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? கடைசியாக அவரிடம் பேசியவர் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. #tamilnews
    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த விமானத்தில் கடத்த முயன்ற ரூ.12 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.

    இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆதாம் (35). இவர் ரஷி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இருவரும் பனையூரில் தங்கி இருந்தனர். நேற்று இரவு ஆதாம் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கானாத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

    காஞ்சீபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 125 பவுன் நகைகளை மீட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், வாலாஜா பாத், பாலுசெட்டிசத்திரம், ஒரகடம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை நடைபெற்று வந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி உத்திரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் நகர டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், வெற்றிச்செல்வன், பழனி, திருநாவுக்கரசு, மணிமாறன் உள்ளிட்டோர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

    காஞ்சீபுரம் அடுத்த தென்னேரி-வாலாஜாபாத் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது, பல இடங்களில் வீடுபுகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேலன், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது.

    கடந்த 6 மாதங்களாக அவர்கள் பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடி வந்தது தெரிந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 125 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடித்த போலீசாரை அவர் பாராட்டினார்.

    சோழிங்கநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை சந்திப்கலா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேஷ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம்- வைர நகைகள் கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். #Kutka
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பாவாஜி தெருவில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கடை மற்றும் அதன் அருகே உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். #Kutka
    வளைவுகளில் விபத்தை தடுக்க கிழக்குகடற்கரை சாலையில் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. #accident #Roadblocking

    மாமல்லபுரம்:

    சென்னை-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து மத்திய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தமிழ் நாட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் பகுதியாகவும், அதிக நெடுவளைவுகள் கொண்ட ஆபத்தான பகுதியாகவும் கல்பாக்கம் அடுத்த கடம்பாக்கம், இடைக் கழிகாடு, பனையூர்குப்பம், மரக்காணம் ஆகிய பகுதிகள் இருப்பதை கண்டறிந்ததனர்.

    மேலும் இரவு நேர நெடுந்தூர வாகன ஓட்டிகளிடம் கருத்துக்கள் கேட்டபோது, “இரவு நேரத்தில் வேகமாக வரும்போது திடீர் என்று நெடுவளைவை பார்த்ததும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது” என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக கடம்பாக்கம்-மரக்காணம் இடையே பனையூர் குப்பம் அருகே உள்ள 300 மீட்டர் நெடுவளைவு ஒன்றில் சீனா நாட்டில் சாலை விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் நைலான் சேப்டி ரோலர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி நவீன வளைவு அமைக்கப்பட்டுள்ளது.


    இதில் இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன் 1000-க்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை கொண்டு சாலை தடுப்பு அமைத்துள்ளனர்.

    இந்த தடுப்புகள் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வரும் வாகனங்கள் மோதினால் விபத்து மற்றும் சேதமின்றி பாதுகாப்பாக திருப்பி விடுகிறது.

    தற்போது கிழக்கு கடற் கரை சாலையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இந்த தொழில் நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ரோலர்களை பயன் படுத்தினால் சாலைகளும் அழகாக இருக்கும் விபத்துக்களும் குறையும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#accident #Roadblocking

    பழமை வாய்ந்த சிலைகளை யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர்:-

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக தவறு செய்யாத யாரையும் நாங்கள் கைது செய்வது இல்லை. குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபணம் ஆனால் மட்டுமே கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே தவறு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


    ஐகோர்ட்டில் அதிகாரி ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளோம். பொறுமையாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு சில பணக்காரர்கள் வீட்டிலும் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #IdolSmuggling
    ×