என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஊத்துக்காடு ஜங்சனில் இருந்து வெங்கச்சேரி வழியாக, ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை சோதனை செய்தபோது அதில் 192 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவாந்தண்டலைத்தை சேர்ந்த கார் டிரைவரான குமரன் (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜயகுமார் (28) ஆகியோரை கைது செய்தனர். காரையும், மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,042 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 50,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,977 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,042 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 808 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்திற்கே மக்கள் போராடி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,963 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 47,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,876 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,963 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 796 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
    சாப்பிட்டதற்கு பணம் தராமல் ஓட்டல் ஊழியர்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்திரோட்டில் உள்ள பிரியாணி கடையில் 2 பேர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களை தடுத்து பணம் தாருங்கள் என்று கேட்டனர். அவர்கள் இருவரும் பணம் தர முடியாது என்று ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சின்ன காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தார். விசாரணையில் மிரட்டல் விடுத்தவர்கள் தாமல் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 23), ஓச்சேரி மாமண்டூரை சேர்ந்த சவுந்தர் (24) என்பதும் அவர்கள் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,731 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 44,094 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,683 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,731 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 755 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,693 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,580 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,693 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 733 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,488 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 85 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 679 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 
    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு கலெக்டர் பொன்னையா அழைப்பு விடுத்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமானது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மகசூல் குறைவு ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு பேருதவி புரியும் திட்டமாகும். இந்த ஆண்டுக்கான (2020-21) திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்ற ஆண்டு வரை இந்த திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகளுக்கு கட்டாயமாகவும், கடன் பெற்ற விவசாயிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலும் காப்பீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய இயலும்.

    சொர்ணாவாரி பருவத்தில் நெல்லுக்கு ரூ.601, நிலக்கடலைக்கு ரூ.225 பிரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந்தேதி. உளுந்துக்கு ரூ.331, எள்ளுக்கு ரூ.183 பிரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்த கடைசிநாள் அடுத்த மாதம் 15-ந்தேதி.

    விவசாயிகள் தங்களது நிலத்தின் அடங்கல் நகல், பட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் போன்றவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,375 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,471 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடிகள் வசா என்ற வசந்த் (வயது 26), ஜெயராமன் (25), நெல்சன் மண்டேலா என்ற கார்த்திக் (23), மதிவாணன் என்ற விக்கி (24), தட்சணாமூர்த்தி (27), இளவரசு (24), வினோத் என்ற வினோத்குமார் (32), ஸ்ரீதர் (23), பாபு (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரவுடிகள் 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி அமராவதிப்பட்டினத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 64). இவர் கீழம்பி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நெமிலி பனப்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (24) காயம் அடைந்தார். இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×