என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    குன்றத்தூர் பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குன்றத்தூர்:

    குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற வாலிபரிடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

    இதையடுத்து, வாலிபர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,968 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,636-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,836 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,968 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1,137 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர். 
    சாந்தவேலுர் ஆரம்ப பள்ளியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக நடந்த சிறப்பு மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள பட்டுநூல்சத்திரம் அரசு பள்ளி, சுங்குவார்சத்திரத்தை அடுத்த சாந்தவேலுர் ஆரம்ப பள்ளியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக நடந்த சிறப்பு மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சப்-கலெக்டர் சரவணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் 34 வயது ஆண், 26 வயது பெண் மற்றும் படப்பை ஊராட்சி பகுதியில் 68 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை 2,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1,032 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1661 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் பலியானார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் வட்டார மருத்துவமனையில் பணியாற்றி வரும் 34 வயது டாக்டர், பனையஞ்சேரி ஊராட்சி சின்ன காலனியில் வசித்து வரும் 28 வயது வாலிபர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நயப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர், மணவாளநகரில் டாக்டரின் உறவினர்கள் 2 பேர், பேரம்பாக்கத்தில் டாக்டரின் உறவினர் ஒருவர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரையில் 4,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3,217 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். ஊத்துக்கோட்டை பஜார் தெருவை சேர்ந்த 55 வயதான நபர் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள சிலப்பதிகாரம் தெருவை சேர்ந்த 33 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யஞ்சேரி கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் 36 வயது பெண், 34 வயது வாலிபர், நந்திவரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 25 வயது இளம்பெண், வண்டலூர் ஊராட்சி ஒட்டேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 31 வயது இளம்பெண், அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் 57 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,853 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,766 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,637 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,547 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,637 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 983 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சிபுரம் திமுக நகர செயலாளரும் காஞ்சிபுரம் பெருநகராட்சி முன்னாள் நகரமன்ற தலைவருமான சன்பிராண்ட் கே.ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,450-ஆக அதிகரித்துள்ளது.
     
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,404 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் இன்று 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,550 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் திமுக  நகர செயலாளரும் காஞ்சிபுரம் பெருநகராட்சி முன்னாள்  நகரமன்ற தலைவருமான சன்பிராண்ட் கே.ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

    அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அனுமந்தபேட்டையை சேர்ந்த வரதராஜ் (வயது 42), குரங்கணிமுட்டம் பகுதியை சேர்ந்த மதியழகன் (42), தூசியை சேர்ந்த மாதவன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,550 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,450-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,404 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,550 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 926 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,395 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,385-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 2,272 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,395 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 925 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சரகத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் மாணவர் படை, போலீஸ் நண்பர்கள் குழு போன்றவை விரிவுபடுத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வது தடுக்கப்படும். இந்த 3 மாவட்டங்களிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஊரடங்கையொட்டி திருமணம், இறுதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். குண்டர் தடுப்பு சட்டத்தில் காஞ்சிபுரத்தில் 31 பேர், செங்கல்பட்டில் 20 பேர், திருவள்ளூரில் 23 பேர் என மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாவட்டங்களிலும் ஊரடங்கின் போது விதிகளை மீறியதாக 85 ஆயிரத்து 758 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 71 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை இரு சக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு வாகன ஓட்டியும் ஹெல்மெட், கையுறை, முககவசம் கட்டாயம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றார். அப்போது காஞ்சீபுரம் நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணா உடன் இருந்தார்.
    ×