என் மலர்
செய்திகள்

விபத்து பலி
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி அமராவதிப்பட்டினத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 64). இவர் கீழம்பி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியது. இதில் காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நெமிலி பனப்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (24) காயம் அடைந்தார். இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story