என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
    • இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த நத்தக்கடையூர் செல்லும் வழியில் கண்ணமாபுரம் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தோட்டத்தில் இன்று காலை சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த வாலிபர் உடல் அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.

    நேற்று இரவு அந்த வாலிபர் மற்றும் அவருடன் வந்த சிலர் தோட்டத்தில் வைத்து மது அருந்தி இருக்கலாம் என்றும் இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    அவரது உடலை மீட்ட அரச்சலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அரச்சலூர் போலீசார் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பழைய பாளையம், ஊஞ்சப்பா பாளையம், வெள்ளி வலசு, வேமண்டாம் பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன் காடு, அட்டவணை அனுமன் பள்ளி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக மாடு, கன்றுக்குட்டி, ஆடு உள்ளிட்டவற்றை மர்ம விலங்கு கொன்று வந்தது. வனத்துறையினர் ஆய்வில் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் அல்லது அந்தியூர் பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை பிடிக்க 7 இடங்களில் கூண்டு , 13 இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டது. இரவு நேரங்களில் இந்த பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதேப்போல் வனப்பகுதிக்கும் கால்நடைகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் பெருந்துறை அடுத்த கொங்கம்பாளையத்தில் ஒரு பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை இழுத்து சென்றது. அத்துடன் அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் சிறுத்தை நடமாட்டமும் பதிவாகி இருந்தது. இதனால் அரச்சலூரில் நடமாடிய சிறுத்தை தற்போது பெருந்துறை பகுதிக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது.

    ஒன்றரை மாதத்துக்கு முன் கொங்கம்பாளையம் பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்கு கொன்றது. அதன் பின் விலங்கு நடமாட்டம் இல்லை. இருந்தாலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணித்தோம். ஆனால் அரச்சலூர் பகுதிக்கு அவ்விலங்கு நகர்ந்தது ஆடு, மாடு கன்றுகளை வேட்டையாடியது.

    அப்போதுதான் சிறுத்தை என உறுதி செய்து 7 இடங்களில் கூண்டு வைத்தோம். அதற்குள் பெருந்துறை பகுதிக்கு அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து ஆட்டை வேட்டையாடியதுடன் வனத்துறை வைத்துள்ள கேமிராவை கடந்து சென்றுள்ளது. இவை 2-ம் ஒரே சிறுத்தை என யூகித்துள்ளோம். இதனால் இப்பகுதிகளிலும் கூடுதலாக கூண்டு வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66 அடியாக சரிந்து உள்ளது.
    • அணையில் இருந்து 2,450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66 அடியாக சரிந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1,578 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டி ருக்கிறது.கீழ்பவானி வாய்க்கால் பாச னத்திற்காக 2,300 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.41 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 7.05 அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.77 அடியும் உள்ளது.

    • தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.
    • வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டிட கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெ ண்ணைய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஸ்டவ்வில் இருந்து தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.

    அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் கோபி சாலை ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த வர் சகுந்தலா (65). இவர் வீட்டு அருகே தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் சகுந்தலா கடைக்கு வந்தார். இதை யடுத்து அன்று இரவு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அந்த வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி சகுந்தலாவை தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானைகோனூர் புதுக்காலனியை சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் சகுந்தலாவை தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து செல்போனை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வட முகம் வெள்ளோடு கிராம த்தில் 77.85 ஹெக்டேரில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    சரணாலயத்தில் தற்போது பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை, அலகு புள்ளி மூக்கு வாத்து, காட நாரை, கரண்டி வாயன், அகிலான், மூக்கன், கருங்கை, வாயன் உட்பட 100-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

    இது மட்டுமின்றி வெளிநாடு களில் இருந்து 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவை கள் அதிகம் வருகின்றன.

    இவை 4 மாதங்கள் தங்கி முட்டை யிட்டு குஞ்சு பொரித்து இன ப்பெரு க்கம் செய்து திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இயற்கை எழிலுடன் அமை ந்த பற வைகள் சர ணால யத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணி கள் பார்வையிட அனுமதி அளி க்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மட்டும் இல்லா மல் அருகே உள்ள மாவட்ட ங்களை சேர்ந்த சுற்றுலா பயணி கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வாடிக்கை. சரணாலயத்துக்குள் சென்று ரசிக்க பெரியோர்களு க்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலி க்கப்படுகிறது.

    இந்த சரணாலயத்துக்கு மாணவர்களை அழை த்து வரும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:

    பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு , பறவைகள் விலங்குகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் முயற்சி யாக மாணவர்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த கட்டணம் இன்றி அனுமதிக்கிறோம்.

    இது தவிர வனத்துறை அலுவலர்கள் நேரடியாக அரசு பள்ளிகளுக்கு சென்று எங்களுடைய வாகனத்தில் குழந்தைகளை அழைத்து வந்து சரணாலயத்தை சுற்றிக் காட்டுவதுடன் பறவைகள் வில ங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    வனம், விலங்குகள் பறவைகளின் அவசியத்தை எடுத்துரைக்கிறோம். ஈரோடு மாவட்டம் மாணவர்கள் மட்டுமின்றி கரூர், திருச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பறவை சரணாலயத்துக்கு வந்து சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன் பட்டி, தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 80, இதேயின கிடாரிக் கன்றுகள் 100,

    சிந்து மற்றும் ஜெர்சி இனக் கறவை மாடுகள் 100, இதேயின கிடாரிக்கன்றுகள் 120 வந்திருந்தன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாரத்து கணசமாக குறைந்து காணப்பட்டது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதேயின கிடாரிக்கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.28ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும். இதேயின கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கடந்த வாரத்தை விட மாடுகள் மற்றும் கன்றுகளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைந்து காணப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
    • இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை நகர் மற்றும் சுற்று பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும்,

    பெருந்துறை போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, பெருந்துறை அமைதி பூங்கா (நவீன எரிமேடை) அறக்க ட்டளையின் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில்

    பெரு ந்துறை நகர், முக்கியமான சாலைகள், தேசிய நெடு ஞ்சாலை மற்றும் பவானி ரோடு, ஈரோடு ரோடு, ஆர்.எஸ்.ரோடு, சென்னிமலை ரோடு, கோவை ரோடு, குன்னத்தூர் ரோடுகளில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கும் உள்பட 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பயன்பாட்டிற்கு வரும்போது குற்ற செயல்களை கண்காணித்து, தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் பெருந்துறை போலீசாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • மாற்று பாதை அமைக்காமல் பாலம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சி எரங்காட்டூர்–சஞ்சீவிராய குளம் செல்லும் சாலையில் பெரும்பள்ளத்தின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் தரைமட்ட பால த்தை இடித்து விட்டு உயர்மட்ட பாலம் கட்டு வதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மாற்று பாதை அமைக்காமல் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்நிலையில் அவ்வழியாக செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கா மல் தரைமட்ட பாலத்தை பொக்லைன் கொண்டு இடிக்கும் பணியை நெடு ஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் அந்த வழியாக செ ல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    பெரும்பள்ளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக தரைமட்ட பாலத்தை இடிக்கும் பணியை பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஆனால் அவ்ழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் இறங்கி செல்கின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மாற்று ப்பாதை இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து தவித்து வருகின்ற னர்.

    இவ்வழியாக ஜெ.ஜெ நகர், அண்ணாநகர், கொளத்துக்காடு சேட்டு காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராம ங்களில் இருந்து கோபி மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்கு பல்வேறு அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்களை பய ன்படுத்தி கோபி செல்லும் கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல்வோர், கள்ளிப்பட்டி செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மாற்றுப்பாதை இல்லா ததாலும், பஸ்கள் வர முடி யாததாலும் பெரும் அவதி க்குள்ளாகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் ஆம்பு லன்ஸ் கூட வர முடியாத நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். மேலும் பஸ் போக்குவரத்து இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மற்றும் மாணவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ள னர்.

    • சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடி வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கொங்கம்பாளையம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களது வீடு, தோட்டங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகிறார்கள்.

    கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனது பட்டியில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த கிராமம் அருகே அரசனாம்பாளையம் மலைக்கரடு உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து கோபால் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆடுகளை கொன்று வருகிறது. இதுவரை அந்த சிறுத்தை கோபாலின் 4 ஆடுகளை கொன்று உள்ளது.

    இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று வனத்துறையினர் சார்பில் ஏற்கனவே அந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடி வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவும் கோபால் பட்டியில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துள்ளது. இன்று காலை பட்டிக்கு வந்த கோபால் ஆடு, சிறுத்தை தாக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை சேகரித்தனர். சிறுத்தை மீண்டும் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து போர்க்கள அடிப்படையில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களாக அறச்சலூர் அருகே சிறுத்தை புகுந்து ஆடு, மாடுகளை தொடர்ந்து கொன்று வருகிறது. இதனால் வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டு வைத்தும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளனர். இதேப்போல் தாளவாடி அருகேயும் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும்.
    • நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த மையத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற 2½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை வீட்டை சுற்றி வைக்கக்கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மேலும் இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் குதித்துள்ளார்.
    • தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி குஞ்சம்மாளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    கோபி:

    சேலம் மாவட்டம் மேட்டூ ரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (62). இவரது மகள் ராஜா மணி. கோபி சீதாலட்சுமி புரத்தில் கணவருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலை அறிந்த குஞ்சம்மாள் தனது மகளை பார்க்க கோபி வந்துள்ளார்.

    அப்போது அவரது மகள் ராஜாமணியும், அவரது கணவரும் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடப்பதை கண்டு மனவேதனையில் குஞ்சம்மாள் செய்வதறி யாது மகளின் வீட்டை விட்டு வெளியேறினார்.

    பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் குதித்துள்ளார்.

    குஞ்சம்மாள் தற்கொலை செய்வதற்காக வாய்காலில் குதித்ததை பார்த்து அருகே துணி துவைத்து கொண்டிரு ந்தவர்கள் குஞ்சம்மாளை காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற சிலர் உடனடியாக வாய்காலில் குதித்து தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி குஞ்சம்மாளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி போலீசார் தற்கொலைக்கு முயன்ற குஞ்சம்மாளிடம் விசாரணை நடத்தியதில் அவரது மகளும், மருமகனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதை கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வாய்காலில் குதித்ததாக தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் மூதாட்டி குஞ்சம்மாளுக்கு ஆறுதல் கூறி அவரது மகள் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×