என் மலர்
ஈரோடு
- லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது
- பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே வன ச்சாலை ரோட்டில் புவியியல் மற்றும் சுரங்க துறை சார்பில் உதவி புவியியலாளர் லட்சுமி ராம்பிரசாத் தலைமையில் கனிம திருட்டு குறித்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கருங்கல் எடுத்து சென்றது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜிடம் விசாரணை செய்ததில் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கிரஷரில் 3 யூனிட் சாதாரண கருங்கல் எடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள் டிரைவர் மனோஜிடம் மேலும் விசாரணை செய்ய முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பிடிபட்ட லாரியை புவியியல் மற்றும் சுரங்க துறையினர், பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
- மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர்
டி.என்.பாளையம்,
பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (39) என்பவர் தனது மனைவி சத்யா மற்றும் மகன், மகளுடன் சொந்த வேலை காரணமாக காரில் கோபி சென்று விட்டு பின்னர் கோபியில் இருந்து பங்களாப்புதூர் சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். காரை ராஜா ஓட்டி வந்துள்ளார்.
அப்போது தனியார் மண்டபம் அருகே ஒரு வலைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜாவுக்கு மட்டும் ரத்த காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
உடன் சென்ற மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர். பள்ளத்தில் விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதமானது.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும் என்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஜீர்கள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சிமிட்டஹள்ளி பகுதியை சேர்ந்த முருகேஷ் (38) விவசாயி ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டை கட்டி வைத்து விட்டு தூங்க சென்ற விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது.
இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால்தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-
கடந்த 15 நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்று உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மீண்டும் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்துக் கொண்டுள்ளது.
இதனால் நாங்கள் பீதியில் உறைந்து உள்ளோம். வனத்துறையினர் உடனடியாக இந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும் என்றனர்.
- குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் இடியுடன் கூடிய கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதைப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதேபோல் அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணி யிலிருந்து இரவு 7 மணிவரை பண்ணாரி, கொத்த மங்கலம், திம்பம் மலைப்பகுதி, ராஜன் நகர் சிக்கரசம்பாளையம், கடம்பூர் மலைப்பகுதி, அணைக்கரை சுஜில்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் நேற்று இரவு முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதனை அடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் சொல்லி வனத்துறையினர் இன்று அதிகாலையில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலத்தில் பரவலாக பெய்த மழையால் சத்தியமங்கலம்-ஊட்டி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
அந்த வழியாக செல்லும் தொட்டம்பாளையம், அய்யன் சாலை பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணி துறைக்கு தகவல் சொல்லி வரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பிறகு 2 மணி நேரம் கழித்து மரத்தை முழுவதுமாக அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-40, ஈரோடு-28, அம்மாபேட்டை-23.40, வரட்டு பள்ளம்-23.30, கோபி-23.20, பவானி-19.40, கவுந்தப்பாடி-9.40, குண்டேரி பள்ளம்-7.80, கொடுமுடி-6, எலந்த குட்டைமேடு-5.40, கொடுமுடி-3, பவானிசாகர்-2.40.
- காரின் பின்னால் ராமசாமி வந்த மொபட் எதிர்பாராமல் மோதியது.
- பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
ஈரோடு அடுத்த நரிபள்ளத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). மரம் ஏறும் தொழிலாளி. சம்பவத்தன்று பெருந்துறைக்கு தனது மொபட்டில் வந்தார்.
பெருந்துறை ஆசிரியர் குடியிருப்பு அருகில் முன்னாள் சென்ற காரின் பின்னால் ராமசாமி வந்த மொபட் எதிர்பாராமல் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அக்கம் பக்க த்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் சிகி ச்சைக்காக சே ர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.2.25 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,329 மூட்டைகளில் 2,51,000 கிலோ கொப்ப ரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.85.11-க்கும், அதிக பட்சமாக, ரூ.94.19-க்கும் விற்பனையானது. 2-ம் தரக் கொப்பரை குறைந்தப ட்ச மாக, ரூ.20-க்கும், அதிகபட்ச மாக ரூ.90.15-க்கும் விற்ப னையானது.
மொத்தம் ரூ.2.25 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை காஞ்சிக்கோயில் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால் (71). திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சி வராமன் (74). தங்கை குமுதா (68). தனது அண்ணன் சிவ ராமன் குடும்பத்துடன் வசி த்து வந்த ஜெயபால், அவரு டன் சேர்ந்து தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.
திருமணமாகாத விரக்தி யில் இருந்து வந்த ஜெயபால் தினமும் மது அருந்தி வந்து ள்ளார். அதுகுறித்து தங்கை குமுதா ஏதாவது கேட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல கடையை திறக்க சென்றவர் திடீரென மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாகடர் வரும் வழியிலேயே ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
- பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
கொடுமுடி:
ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.
கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.
கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.
தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
- கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சின்னபள்ளம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 44). இவர் பூதப்பாடியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பஸ் மேனேஜராக உள்ளார்.
இவர் நேற்று மதியம் தனது மனைவி எலிசபெத் (40), மகள் ஜோவிட்டா ஜாஸ்மின் (20) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கி ளில் பூதப்பாடியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன பள்ளத்தை சேர்ந்த டேவிட் என்பவர் டேனியல் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்தார்.
இதையடுத்து டேனியல் எதற்காக என் மீது மோதுவது போல் வந்தாய் என டேவிட்டிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டேவிட் தனது மோட்டார் சைக்கிள் வைத்திருந்த அரிவாளை எடுத்து டேனியலை தாக்க முயன்றார்.
இதை தடுத்த போது டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தடுக்க முயன்ற எலிசபெத் மற்றும் ஜோவிட்டா ஜாஸ்மினுக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பட்டப் பகலில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.
இதை தொடர்ந்து டேவிட், டேனியலை பார்த்து இப்போது தப்பித்து விட்டாய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து காயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலை வீசி தேடி வருகின்றனர்.
- ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசெல்வன் (40). இவரது மனைவி ரதி (34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் மகளுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் ஏற்பட்ட இதயக்கோளாருக்கு சிகிச்சை பெறுவதற்காக கடன் பெற்று ள்ளனர். அந்த கடனை கட்ட முடியாத அளவில் தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் ரதி காணப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று உணவு வாங்கி வர சண்முகசெல்வனும், அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடைக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டு திரும்பிய சண்முகசெல்வன் இதனை அறிந்து அதிர்ந்து போனார். பின்னர் சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற அரச்சலூர் போலீசார் ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த உடலை பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு மேற்கொண்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டி திறந்து இருந்தது.
- நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலு வலகம் எதிரே பல்வேறு மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல் பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையை அதன் உரிமையாளர் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.
இதை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் மேற்பகுதியில் மேல் உள்ள ஓடு நகர்ந்து இருப்பது தெரிய வந்தது.
இதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டியும் திறந்து இருந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.
இதில் கொள்ளையர்கள் கடையின் ஓட்டை பிரித்து பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்க்றார்கள். அங்கு பணம் இல்லாத காரணத்தினால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அவற்றை அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.
மேலும் கடையில் பொரு ட்கள் அப்படியே இருந்தது. அங்கு எதுவும் எடுத்து செல்லாதது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யார் என தெரிய வில்லை.
மேலும் சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபு ணர்கள் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் வந்து சோதனை செய்து தடய ங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் குறித்து தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஹைருன்னிசா வெளியில் சென்று விட்டு வரும்போது கீழே விழுந்து விட்டார்.
- இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ஹைருன்னிசா (57). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
ஹைருன்னிசா கடந்த மாதம் வெளியில் சென்று விட்டு வரும்போது அப்பகு தியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் கீழே விழுந்து விட்டார்.
இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அதன்பின் ஹைருன்னிசா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மீண்டும் ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹைருன்னிசா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அலாவூதீன் (38) அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






