என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.11 அடியாக சரிந்து உள்ளது.
    • 1,150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.11 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 234 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1000 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.37 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.62 அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியும் உள்ளது.

    • காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    ஈரோடு:

    வட மாநிலத்தை சேர்ந்தவர் சம்பு மகா நந்தா. இவரது மனைவி காயத்ரி. இவர்கள் இருவரும் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆலாங்காட்டு புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர காலம் மருத்துவர் காயத்ரியை குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட விஜயமங்கலம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    ஈரோடு:

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவங்களில் பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரும், ரபி பருவத்தில் கரும்பு பயிரும் பிர்க்கா அளவில் அறிவி க்கை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு 28 பிர்கா க்களும், கரும்பு பயிருக்கு 30 பிர்காக்களும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளன. அறிவிக்கை செய்ய ப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.557.25 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ரூ.3115 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி 1433 ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகிய வற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சம்பா நெல் பயிருக்கு வருகின்ற நவம்பர் 15-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு அடுத்த வருடம் மார்ச் 30-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும்.

    இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடா மல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் சித்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால் நிறுவன அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 விதம் உயர்த்தி அறிவித்திட கோரி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பெருமாள், மாநில பொருளாளர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வர்கள் தீவனங்கள், கால்நடைகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட கூடுதல் விலை கொடுப்பதால் ஆரம்ப சங்கங்கள் மூடுவதை தடுத்து நிறுத்தும் முறையில் பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி ஒரு லிட்டருக்கு பசும்பாலு க்கு ரூ. 45-ம், எருமை பாலுக்கு ரூ.54 என அறிவிக்க வேண்டும்.

    கொழுப்பு சத்து 5.9க்கு மேல் வராத நிலையில் அமைச்சர் கூடுதல் கொள்முதல் விலையை அறிவித்திருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழ்நாடு அரசு 1 லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்க தொகை அறிவித்தது வெறும் கண்துடைப்பு என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கறவை மாடுகளுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முள்வேலிக்குள் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
    • போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அளுக்குளி அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது அங்குள்ள முள்வேலிக்குள் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த செல்வன் (38), முருகன் (40), விஸ்வநாதன் (40), பழனிசாமி (60), ஆனந்தபாபு (30), பழனிசாமி (40) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ரூ.600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் கடந்த 20 வருடங்களாக பெருந்துறை அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நடராஜன் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளரை சந்திக்க சென்றார். அப்போது பணி சம்பந்தமாக வணிக மேலாளர் நடராஜனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர் பெருந்துறை போக்குவரத்து கழக கிளை அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் அங்கு சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைப் பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை கிளை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 80 பேர் நள்ளிரவில் பணிமனை நுழைவு வாயில் பகுதியில் திரண்டர். இதை தொடர்ந்து அவர்கள் சக ஊழியரை அவமானப்படுத்தி அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் மருத்துவ செலவை அவரே ஏற்க வேண்டும். இல்லை என்றால் இன்று அதிகாலை முதல் பெருந்துறை கிளை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் மருத்துவச் செலவினை போக்குவரத்து கழகமே கவனித்து கொள்ளும் என்றும் கூறினர். இதை யடுத்து அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது
    • சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    ஈரோடு,

    ஈரோடு வ உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா, மைசூர் போன்ற பகுதியி லிருந்து நாள் ஒன்றுக்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் வட மாநி லம், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்து ள்ளது.

    குறிப்பாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 -க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.65-க்கு இருக்கி றது.

    வெளிக்கடையில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெ ங்காயம் ரூ.70 - 80 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.70 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பொதுவாக ஈரோடு வஉசி காய்கறி மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 10 லாரிகள் வெங்காயம் மூட்டை வந்து கொண்டிருந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து இன்று வெறும் 4 லாரிகள் மட்டுமே வெங்காயம் வரத்தாகி உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னிமலை பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை பெருந்துறை ஆர்.எஸ். பண்ணை நகரில் இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது
    • அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்க ளில் யாரும் பதிவிட வேண்டாம்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை யை பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    சிலர் மற்ற இடங்களில் எடுத்த சிறுத்தை படங்களை சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு அது அரச்சலூர், சென்னி மலை, பெருந்துறை உள்ளி ட்ட பகுதிகளில் எடு த்தது போல் பரப்பி விடுகி ன்றனர்.

    அங்கு சிறுத்தை வந்ததற்கான எந்த கால் தடமும் அடையாளமும் இல்லை. இதனால் வன த்துறையினருக்கு சிறுத்தையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் சுற்றி த்திரிந்த சிறுத்தை பெருந்துறை ஆர்.எஸ். பண்ணை நகரில் இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதை அடுத்து வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அங்கு சிறுத்தை வந்ததற்கான எவ்வித தடய மும் இல்லை.

    இது குறித்து வன அலு வலர் சுரேஷ் கூறியதாவது:-

    சிறுத்தையை பிடிக்க 9 கூண்டுகள் அமைத்து உள்ளோம். 21 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள், 7 சிற ப்பு குழுக்கள் அமைத்து சிறுத்தை யை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள் அச்சம் அடையாமல் இருக்கவும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பொதுமக்களை பீதி அடைய செய்யும் வகை யில் சிலர் தவறான தகவல் களை பரப்பி வருகின்றனர்.

    எனவே அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்க ளில் யாரும் பதிவிட வேண்டாம். சிறு த்தையை பார்க்காமல் பொய்யான தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

    பொதுமக்களும் அது போன்ற தகவலைகளை நம்பி பீதி அடைய வேண்டாம். விரைவில் சிறுத்தை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறி னார்.

    • தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்
    • தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், குதிரை க்கல்மேடு, கோனேரி ப்பட்டி பிரிவு, சாயபு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தாண்டவன் (47). குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையத்தில், மின்சா ர்த்துறையில் ஒயர்மே னாக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சர ஸ்வதி (38). இவர், அப்பகு தியில் உள்ள தோட்டங்களில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருவாராம். இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரி யில் படித்து வருகின்றனர். தாண்டவன் மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல சரஸ்வதி தோட்ட வேலை க்கு சென்று விட்டாராம். சுமார் 10.30 மணியளவில் தாண்டவ னின் தாய் பழனியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வெளியில் சென்று விட்டு வந்த தாண்டவன் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.

    உடனடியாக பழனி யம்மாள் தனது மருமகள் சரஸ்வதி வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அதுகுறித்து கூறியுள்ளார்.

    இருவரும் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது தாண்டவன், பேனில் கயிறால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தாண்டவனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே தாண்டவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்
    • சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் இறந்து கிடப்பது தெரிய வந்தது

    ஈரோடு,

    மகாராஷ்டிர மாநிலம், தனோரா, வார்டு எண் -3 ஐ சேர்ந்தவர் அமர் (28). இவரது தம்பி சாகர் தத்து பவன் (25). இருவரும் கடந்த ஒரு வருடமாக, ஈரோடு அடுத்துள்ள சோளங்கா பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற் சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர்.

    மதுவுக்கு அடிமையான அமர் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றிக் கொண்டிருந்து ள்ளார்.

    தம்பி சாகர் தத்து பவன், அண்ணன் அமருக்கு அறிவுரைகள் கூறி வந்துள்ளார். இதனால், அமர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றாதா கவும் தெரிகிறது.இந்த நிலை யில், கடந்த 2 நாள்களாக அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

    நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் போதையில் தள்ளாடியவாறு மீண்டும் அமர் மதுக்கடைக்கு செ ன்றதை சாகர் தத்து பவன் பார்த்துள்ளார்.

    ஆனால், நேற்று காலை 10 மணி வரையில் அமர், அவரது குடியிருப்புக்கு வரவில்லை. இதையடுத்து, சாகர் தத்து பவன், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மேற்பா ர்வையாளருடன் அமீரை தேடிச் சென்று ள்ளார்.

    அப்போது, சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அமீர் இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து, சாகர் தத்து பவன் அளித்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

    • 50 முதல் 55 வயது வரை மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது
    • உடல் அழுகிய நிலையில் இருந்தது

    ஆப்பக்கூடல்,

    ஈரோடு மாவட்டம், அத்தாணி, காமராஜபுரம் அருகே உள்ள பவானி ஆற்றின் வடக்கு கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக குப்பாண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவல ராகப் பணியாற்றி வரும் விஜயகுமாருக்கு (41) நேற்று தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் விஜய குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டதில், சுமார் 50 முதல் 55 வயது வரை மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது.

    சடலமாக கிடந்தவர் பச்சை கலர் கோடு போட்ட அரைக்கை சட்டையும், சிவப்பு கலர் அரைஞாண் கயிறும் அணிந்திருந்தார்.

    இடது கை நடு விரலில் கருப்பு வளையம் அணிந்து இருந்தார். இடது கையில் சிவப்பு கயிறும், வலது கையில் பச்சை கயிறும் கட்டி இருந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர், யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது
    • கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்

    சென்னிமலை,

    மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொணரும் வகையில் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகு ப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கடந்த 2 நாட்களாக 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது.

    போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) ஜோதி சந்திரா தலை மையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

    கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் சென்னிமலை வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் கோபிநாதன், வட்டார கல்வி அலுவலாகள் ராஜேந்திரன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×