பணம் வைத்து சூதாடிய 6 பேர் கும்பல் கைது

முள்வேலிக்குள் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கும்பல் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அளுக்குளி அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது அங்குள்ள முள்வேலிக்குள் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த செல்வன் (38), முருகன் (40), விஸ்வநாதன் (40), பழனிசாமி (60), ஆனந்தபாபு (30), பழனிசாமி (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ரூ.600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com