தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு

ஹைருன்னிசா வெளியில் சென்று விட்டு வரும்போது கீழே விழுந்து விட்டார். இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.
தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ஹைருன்னிசா (57). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

ஹைருன்னிசா கடந்த மாதம் வெளியில் சென்று விட்டு வரும்போது அப்பகு தியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் கீழே விழுந்து விட்டார்.

இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அதன்பின் ஹைருன்னிசா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மீண்டும் ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹைருன்னிசா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அலாவூதீன் (38) அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com