போண்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை

தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போண்டா மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை
Published on

பெருந்துறை:

பெருந்துறை காஞ்சிக்கோயில் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபால் (71). திருமணமாகவில்லை. இவரது அண்ணன் சி வராமன் (74). தங்கை குமுதா (68). தனது அண்ணன் சிவ ராமன் குடும்பத்துடன் வசி த்து வந்த ஜெயபால், அவரு டன் சேர்ந்து தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

திருமணமாகாத விரக்தி யில் இருந்து வந்த ஜெயபால் தினமும் மது அருந்தி வந்து ள்ளார். அதுகுறித்து தங்கை குமுதா ஏதாவது கேட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என ஜெயபால் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல கடையை திறக்க சென்றவர் திடீரென மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாகடர் வரும் வழியிலேயே ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com