கடன் தொல்லையால் பெண் தற்கொலை

ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடன் தொல்லையால் பெண் தற்கொலை
Published on

அரச்சலூர்:

அரச்சலூர் அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசெல்வன் (40). இவரது மனைவி ரதி (34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களின் மகளுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் ஏற்பட்ட இதயக்கோளாருக்கு சிகிச்சை பெறுவதற்காக கடன் பெற்று ள்ளனர். அந்த கடனை கட்ட முடியாத அளவில் தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் ரதி காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சம்பவத்த ன்று உணவு வாங்கி வர சண்முகசெல்வனும், அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டு திரும்பிய சண்முகசெல்வன் இதனை அறிந்து அதிர்ந்து போனார். பின்னர் சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அங்கு சென்ற அரச்சலூர் போலீசார் ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த உடலை பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு மேற்கொண்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com