என் மலர்
ஈரோடு
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெருந்துறை:
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஈரோட்டில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் தலைமையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து பொதுத்துறை வங்கிகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான அளவில் முதலீடுகள் வழங்கப்பட வேண்டும் கிராமப்புற கிளைகள் அதிக அளவில் துவக்கப்பட வேண்டும்.
வங்கிகள் இணைப்பு என்னும் பெயரில் வங்கி மூடப்படுவதை கண்டித்தும் வங்கிகள் இணைப்புத் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத வர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கித் துறையை சீர்குலைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் வங்கிகள் போராட்டத்தில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சித்தோட்டில் மின்சாரம் தாக்கி சென்டரிங் தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
அரியலூர் மாவட்டம், குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் அம்பிகேஸ்வரன் (வயது 34). இவர் நசியனூரில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி கட்டுமான பணியில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அம்பிகேஸ்வரனை உடன் பணி செய்பவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மனைவி திலகவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய-விடிய மழை கொட்டியது. அந்தியூர் மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 66.8 மி.மீ மழை பெய்தது.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய-விடிய மழை கொட்டியது. அந்தியூர் மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 66.8 மி.மீ மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், பெரும்பள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியான தாளவாடி, தலமலை பகுதியில் கொட்டிய மழையால் சிக்கள்ளியில் தரைப்பாலம் மூழ்கியது. பாலத்தின் மீது ஆர்ப்பரித்தப்படி மழை வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் தாளவாடி ரோடு துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி மலை பகுதியில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12367 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 101 அடியை தொட்ட அணை இன்று 102 அடியை எட்டியது. இன்னும் 2 அடி மட்டுமே உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும் அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு 10 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் இன்று அதிகாலை 1 மணியளவில் திறக்கப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா போடப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் விருட்டம்பதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 60). நேற்று மாலை இவரும் இவரது உறவினர் மணிகண்டன் என்பவரும் ஸ்கூட்டரில் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 வாகனங்களும் மோதிக்கொண்டன.
இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த சாமியப்பன் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த உறவினர் மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாமி சிலைகளை உடைத்த முகமூடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்ப பாளையத்தில் புகழ்மிக்க பொன் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான காளியண்ணன் கோவில் உள்ளது.

இந்த கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும். பொன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா அன்று இந்த சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
இதில் அனைவரும் முகம் தெரியாதபடி துணியால் மூடி இருந்தனர். கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த முகமூடி கும்பல் கோவில் வளாகத்தில் இருந்த கூரை காளியண்ணன் மற்றும் விளைய காளியண்ணன் ஆகிய 6 அடி சிலைகளை அடித்து நொறுக்கினர்.
2 சிலைகளையும் கீழே படுக்க வைத்து சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் ஆக்ரோஷமாக அடித்து உடைத்தனர். இதில் சாமி சிலைகளின் கை-கால்கள் துண்டானது. சிலைகள் முழுவதும் சேதம் ஆனது.
அதன் பிறகு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இன்று காலை இந்த சம்பவம் குறித்து தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதனால் கோவில் முன் பொதுமக்கள், பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விரைந்தார். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே நுழைவதும் பிறகு பெரிய சம்மட்டிகளால் சிலைகளை ஆவேசமாக உடைப்பதும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் அனைவரும் முகமூடி அணிந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லை.
இதனால் உடல் அங்க அடையாளங்களை வைத்து சிவகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம தலைவர்கள் கூறும்போது, ‘‘சாமி சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

இந்த கோவிலில் கூரை காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற 6 அடி உயரத்தில் 2 சாமி சிலைகள் உள்ளன.

கோபி அருகே மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:
ஈரோடு மாவட்டம் கோபி நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 18). அந்த பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார்.
கோபி லக்கம்பட்டி ஈஸ்வரமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் புதுவீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கான எலெக்ட்ரிக்கல் வேலைகளையும் பாஸ்கர்தான் செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை 4½ மணி அளவில் செந்திலின் வீட்டில் பாஸ்கர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அருகே இருந்தவர்கள் பாஸ்கரை மீட்டு ஆம்புலன்சில் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த பாஸ்கரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஈரோட்டில் கலெக்டர் கதிரவன் நடத்திய ஆய்வில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு கொசு உற்பத்தி செய்யும் சூழ்நிலை கண்டறியப்படும் வீடுகள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்.
இன்று மூன்றாவது நாளாகவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வு தொடர்ந்தது. இன்று காலை ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் டெங்கு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
கலெக்டர் கதிரவன் பேரணிக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சைக்கிளில் பேரணியாக சென்று டெங்கு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
ஈரோடு மண்டலம் 2-க்கு உட்பட்ட நடேசன் மில் காம்பவுண்ட் சின்னமுத்து வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஒரு மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த ஆய்வகம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அந்த ஆய்வகத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு மாடியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த உணவகத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் கொசு புழுக்கள் உருவாகும் வகையில் சூழல் ஏற்படும் கடைகள் வீடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்க கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

ஈரோடு அருகே டெங்கு சுகாதார முறையில் இருந்த உணவு கூடத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு பகுதியில் கலெக்டர் கதிரவன் தலைமையில் இன்று ஒவ்வொரு வீடு-வீடாகவும், கடை கடையாகவும் மற்றும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை கலெக்டர் தலைமையில் மூலப்பாளையம் பகுதியில் டெங்கு நோய் கொசு ஒழிப்பு பணி ஆய்வு நடந்தது.
கலெக்டர் கதிரவன் மூலப்பாளையத்தில் கடை கடையாக, வீடு வீடாக மற்றும் நிறுவனங்களிலும் புகுந்து சோதனை மேற்கொண்டார்.
அப்பகுதியில் உள்ள ஒரு கேட்டரிங் சென்டரில் (உணவு கூடம்) சோதனை நடந்த போது அங்கு சுகாதார மற்ற முறையில் இருந்தது தெரிய வந்தது.
இதையொட்டி கலெக்டர் கதிரவன் அந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
இதே போல் 5 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

மழை காலங்களில் நனைந்த சுவர்களை தொட வேண்டாம் என ஈரோட்டில் மின் வாரிய அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மழை காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவேண்டாம். உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் வாரிய வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
தண்ணீரில் நனைந்த மின் ஒயர்கள் செல்லும் ஒயரிங்கில் மின் கசிவு இருந்தால் ஈரமான சுவர்களை தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து எலக்ட்ரீசனை வரவழைத்து முழுமையாக சரிபார்த்து ஏதேனும் பழுது இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும்.
மேலும் பழுதான வயர்களை தொடக்கூடாது. மழைக்காலத்தில் மின் கம்பங்கள் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் உயர்ந்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகமாக வருகிறது. நீர் பகுதியான நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. இன்று 9 மணி நிலவரப்படி நீர்மட்டம் 97 அடியை தாண்டியது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மாப்பேட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ஊமாரெட்டியூரை அடுத்துள்ள அந்தோனிபுரத்தில் வேலா புளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமாக கல் குவாரி இயங்கி வருகிறது.
அங்கு நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் நெரிஞ்சிப்பேட்டை கரட்டுகொட்டாயை சேர்ந்த செந்தில்(40), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே ஜேடர்பட்டி ஆருளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (38), நெரிஞ்சிப்பேட்டை கோயில் கரட்டை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் கல்குவாரியில் துளை போட்டு வெடிமருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் பாறை சரிந்து செந்திலும், ஆறுமுகமும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சுப்பிரமணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவத்தை கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், அந்தியூர் தாசில்தார் மாலதி, அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் நிலவருவாய் அதிகாரி சாந்தி உள்பட அதிகாரிகள் நேரில் சென்று வெடி விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
தற்போது வெடி விபத்து நடந்த பகுதிக்கு பொது மக்கள் யாரும் போகாதவாறு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கல்குவாரியில் முறையாக வெடிமருந்து பயிற்சி பெற்ற நபர்களை வைத்து கையாள தவறியது எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் உரிமையாளர்கள் பூபதி, முத்துநாதன், மானேஜர் பழனிசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு முள்ளம்பரப்பு முறை நகரைச் சேர்ந்தவர் சுமதி. இவரது கணவர் இருசப்பன் (வயது39). சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார்.
இவர் குடும்பத்துடன் ஈரோடு பூந்துறை அடுத்த முல்லை நகரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இருசப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக கொல்கத்தா சென்று விட்டார். சுமதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை சுமதி ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை சுமதிக்கு ஒரு போன் வந்தது. அதில்பேசிய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் உங்கள் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி வீட்டுக்கு வேகமாக வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் பூட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ திறந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகையும், 60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டின் அருகே வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.