search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டர்
    X
    ஈரோடு கலெக்டர்

    ஈரோடு உணவு கூடத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் - கலெக்டர் கதிரவன் அதிரடி

    ஈரோடு அருகே டெங்கு சுகாதார முறையில் இருந்த உணவு கூடத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு பகுதியில் கலெக்டர் கதிரவன் தலைமையில் இன்று ஒவ்வொரு வீடு-வீடாகவும், கடை கடையாகவும் மற்றும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இன்று காலை கலெக்டர் தலைமையில் மூலப்பாளையம் பகுதியில் டெங்கு நோய் கொசு ஒழிப்பு பணி ஆய்வு நடந்தது.

    கலெக்டர் கதிரவன் மூலப்பாளையத்தில் கடை கடையாக, வீடு வீடாக மற்றும் நிறுவனங்களிலும் புகுந்து சோதனை மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள ஒரு கேட்டரிங் சென்டரில் (உணவு கூடம்) சோதனை நடந்த போது அங்கு சுகாதார மற்ற முறையில் இருந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி கலெக்டர் கதிரவன் அந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

    இதே போல் 5 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×