என் மலர்
ஈரோடு
ரூ.224 கோடியில் நடைபெற்று வரும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் ரூ.224 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த திட்டத்தினால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோயில், நல்லாம்பட்டி, பள்ளாபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்துார் பேரூராட்சிகள் பயன்பெறுகின்றன,’ என்றார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் (குடிநீர் வழங்கல் துறை) தங்கவேல், கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறையில் முககவசம்- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று பெருந்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களில் முககவசம் அணியாமல் வந்ததற்காக 50 பேருக்கு தலா ரூ.50-ம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக மேலும் 15 பேருக்கு தலா ரூ.100-ம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஒலிபெருக்கி மூலம் முககவசம் அணிவதின் அவசியம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அதுமட்டுமின்றி முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் இலவசமாக முககவசங்களை வழங்கினர்.
ஈரோட்டில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து முடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் இருந்து தில்லைநகர் வரை வீட்டுக்கழிவுகள் செல்வதற்கு வசதியாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இதனால் சாக்கடை கால்வாயில் மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் போது அதிக அளவில் துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் இருந்தது.
அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்தது. தற்போது சாக்கடை கால்வாய்க்குள் கிடந்த மண் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு ரோட்டில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் கூறும்போது, ‘கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் இருந்து தில்லைநகர் வரை உள்ள சாக்கடை கால்வாய் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இடுப்பளவு ஆழம் உள்ள இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் நிரம்பி கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
தற்போது இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முதல் நாளில் 16 பேரும், 2-வது நாளில் 12 பேரும், 3-வது நாளில் 13 பேரும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 டிராக்டர் அளவுள்ள மண் சாக்கடை கால்வாய்க்குள் இருந்து அள்ளி ரோட்டில் கொட்டப்பட்டு உள்ளது. இந்த மண்ணை விரைந்து எடுத்துச்செல்ல வேண்டும்’ என்றார்.
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ஒரத்துப்பாளையம் அணை.
இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவு நீர் அதிக அளவில் கலந்ததால் அணை நீர் முற்றிலும் மாசுபட்டது. மேலும் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் மூலம் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் உள்ள கிணறுகள், நீர் நிலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் முற்றிலுமாக சாயக்கழிவுகள் இல்லாத வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், திருப்பூர் பகுதியில் செயல்படும் சாய தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவைகளை சீல் வைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாயக்கழிவு நீரை அப்படியே வெளியேற்றிய 100-க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டறிந்து சீல் வைத்தனர். அதன்பிறகும் திருப்பூர் பகுதியில் மழை பெய்யும் போது மழை நீரோடு மீண்டும் சாயக்கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் முதல் 3 மாதங்கள் கடுமையான ஊரடங்கு இருந்த சமயத்தில் மழை பெய்த போது சாயக்கழிவு நீர் கலக்காமல் சுத்தமான தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 30 நாட்களாக தமிழகத்தில் தொழிற்சாலைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையொட்டி திருப்பூர் பகுதியில் சாய தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்தன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு தற்போது தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால் மீண்டும் அதிக அளவில் சாயக்கழிவு கலந்து செல்கிறது. இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது’ என்றனர்.
ஈரோடு அருகே ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி-மாவேலிபாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே செம்மங்குளம் கருமாவுரம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் சுமார் 4 கிலோ எடை கொண்ட கல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அந்த கல்லில் மோதி நின்றது.
இதைத்தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க கோவை ரெயில்வே கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒருக்காமலை பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும், இவர் தான் ரெயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். குற்றவாளியை விரைவில் கைது செய்த தனிப்படை போலீசாரை ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.
ஈரோட்டில் செல்போன் உயர்கோபுர உதிரி பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவில் தனியார் செல்போன் உயர்கோபுரம் அமைக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனுக்கு நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ராஜீவ் கடந்த 14-ந் தேதி சென்றார். அப்போது குடோ னின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் குடோனுக்குள் சென்று அவர் பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பேட்டரிகள் உள்பட சுமார் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜீவ் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் உதிரிபாகங்களை திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சரக்கு ஆட்டோ சென்றது தெரியவந்தது. அதை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தனர். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டதில் அவர்கள், வீரப்பன்சத்திரம் சு.கா.வலசு பகுதியை சேர்ந்த மாரியப்பனின் மகன் தினேஷ் (வயது 30), சென்னிமலைரோடு முத்துகுமாரசாமி வீதியை சேர்ந்த கோவிந்தனின் மகன் புவனேஸ்வரன் (29), சித்தோடு செங்குந்தபுரத்தை சேர்ந்த தியாகராஜனின் மகன் சரத்குமார் (28), சித்தோடு இந்திராநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35) ஆகியோர் என்பதும், இவர்கள் மாணிக்கம்பாளையத்தில் உள்ள குடோனில் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உதிரிபாகங்களையும், சரக்கு ஆட்டோவையும் போலீசார் மீட்டனர்.
கொரோனா ஊரடங்கால் வியாபாரம் பாதிப்படைந்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகள்களை எப்படி படிக்க வைப்பது? என வீரலட்சுமி புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த வீரலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர் அங்கிருந்து வீரலட்சுமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரலட்சுமி இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் மோட்டார் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது வனப்பகுதியை சுற்றி பார்க்க வந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் பிடித்து மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைத்தனர். அவரது உத்தரவின் பேரில் பிடிபட்ட 3 பேருக்கும் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள் வறுமையால் தங்களது குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு :
ஈரோடு ரெயில்வே காலனி பகுதியில் 4 சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஈரோடு ரெயில்வே சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த அமைப்பை சார்ந்த ரீடு தொண்டு நிறுவனத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமிகளிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெற்றோர் ஈரோடு சோலார் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அதன்பின்னர் சைல்டுலைன் அமைப்பினர் அங்கு சென்றும் விசாரித்தனர்.
அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் வசித்து வருவதும், அவர்கள் வேலையின்றி இருந்து வந்ததால் தங்களது குழந்தைகளையே பிச்சை எடுக்க அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோலார் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள்? அதில் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது? போன்ற விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், உரிய நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதர் அருகே 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாரியண்ணன் (வயது 65), லோகேஸ் (27), சந்தோஷ்குமார் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 160 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே கள் பதுக்கி வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே பனையம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தோட்டத்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வு எழுதாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 31 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
ஈரோடு:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 24-ந்தேதி நடந்த தேர்வினை, கொரோனா பீதியாலும், ஊரடங்கு காரணமாகவும் ஏராளமானோர் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,002 மாணவ -மாணவிகள் இறுதி பொதுத்தேர்வினை எழுதவில்லை.
இதைத்தொடர்ந்து தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளிடம் தேர்வு எழுத விருப்பம் கேட்கப்பட்டது. அதில் 23 மாணவிகளும், 7 மாணவர்களும் என 30 பேர் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 17-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், பள்ளிக்கூடங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு தேர்வு அறைக்கு மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர் கிருமி நாசினி தெளித்தார். மேலும் தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்து மையத்திலும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (அதாவது இன்று) 13 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 மாணவ -மாணவிகளும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பதால் மொத்தம் 31 மாணவ -மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்’ என்றனர்.