என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
பவானிசாகர்:
பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.
கடந்த 3-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
105 அடி கொண்ட அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் 2 அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24,112 கனஅடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் ரூ.2 ஆயிரத்துக்காக தாயை கொன்று உடலை மயானத்தில் புதைத்த மகன்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு விக்னேஷ் (27), அருண்குமார் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் வேலை செய்து வருகிறார்கள். கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரோஜாவும், அவரது 2 மகன்களும் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை அவர்கள் தேடி பார்த்து உள்ளனர். அப்போது பணம் இல்லாததால், சரோஜாவிடம் அது குறித்து அவர்கள் கேட்டனர். அதற்கு அவர் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் தாய்-மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் மின்விசிறி பொருத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கி உள்ளனர். அதில் வலி தாங்க முடியாமல், அவர் அலறினார். இதனால் சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினார்கள். உடனடியாக விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் சரோஜாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றார்கள். அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து எந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே சூரம்பட்டிவலசு சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் என்பதும், 2 பேரும் தாக்கியதில் சரோஜா உயிரிழந்ததால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்து விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து புதைத்த சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்பிறகு ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி முன்னிலையில் நேற்று மாலை உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. உடல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு, அதை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட விக்னேஷ், அருண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:-
சரோஜா இறந்த சம்பவத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது மகன்கள் தாயின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட்டனர். வருவாய்த்துறையினரின் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வெளிவரும். அதில் சரோஜா கொலை செய்யப்பட்டது உறுதியானால், கொலை வழக்காக மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஜர்த்தலை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகன் கோகுல் (வயது 20). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டிருந்ததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் பெருமாளின் தந்தைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
தாத்தா இறந்ததால் கோகுல் துக்கத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோகுல் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லை உள்ளது. அங்கு போலீஸ் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. கருங்கல்பாளையம் போலீசார் அங்கு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு உள்ளே நுழையும் வாகனங்களை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றிய புகார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு சென்றது. அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், அந்த வீடியோ பதிவானபோது பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கியதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். விசாரணையின் முடிவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகா் அணை விளங்கி வருகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில நாட்களாக பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து 1,916 கனஅடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரத்து 826 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து காரணமாக அணையின் நீா்மட்டம் ஒரேநாளில் 1 அடி உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 87.17 அடியாகவும், நீா் இருப்பு 19.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவருடைய கணவரே குத்திக்கொலை செய்தார். இதுதொடர்பாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வீரமணிகண்டன் (வயது 28). எலக்ட்ரீசியன்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சாஸ்தாமூர்த்தி. இவருடைய மகள் பவித்ரா (23). வீரமணிகண்டனும், பவித்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், கைக்குழந்தையும் உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பவித்ரா தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
வீரமணிகண்டன் தன்னுடைய குழந்தையை கொடுக்குமாறு கேட்டு அடிக்கடி பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமணிகண்டன் தனது நண்பரான எரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பவித்ரா வீட்டுக்கு சென்று உள்ளார்.
பின்னர் 2 பேரும் சேர்ந்து குழந்தையை கொடுக்குமாறு கேட்டு பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தி மற்றும் வீரமணிகண்டனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாய்த்தகராறு முற்றியதில் வீரமணிகண்டன் ஆத்திரம் அடைந்து அருகில் நின்று கொண்டிருந்த பவித்ராவை கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா மயங்கி விழுந்தார். மேலும் சாஸ்தாமூர்த்தி, அவருடைய மனைவி அமுதா (45) மற்றும் பவித்ராவின் பாட்டி சித்தம்மாள் (70) ஆகியோரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு 9 மாத கைக்குழந்தையை வீரமணிகண்டன் மற்றும் ராம்குமார் ஆகியோர் தூக்கி சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்து கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சாஸ்தாமூர்த்தி, அமுதா, சித்தம்மாள் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணிகண்டன் மற்றும் ராம்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமணிகண்டன் மீது மாமனார் சாஸ்தாமூர்த்தியை கத்தியால் குத்தி கைவிரல்களை காயப்படுத்தியதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம் செய்த மனைவியை கணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
பெருந்துறை:
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். குள்ளம்பாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து 88 ஆயிரம் செலவில் 701 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியையும், திங்களூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கிராம சந்தையையும், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கான கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிமாலா, மோகன், உதவி பொறியாளர் அட்சயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பவானி:
பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் பெரியசாமி, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி தலைமை பொறியாளர் கதிர்வேலு, சுகாதார அலுவலர் சோலை ராஜா உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், ‘பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அனைத்து மக்களும் முககவசம் அணிவதின் அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் அதிக அளவில் சந்திக்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினசரி மார்க்கெட், பெரிய நிறுவனங்கள், மளிகை கடைகள், போன்றவற்றில் அரசின் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்,’ என அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தோட்டத்தில் முளைத்த ராட்சத காளான்களை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 54). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் வாழை, காய்கறி, நிலக்கடலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளார். நேற்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு முளைத்து இருந்த ராட்சத காளான்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். ஒவ்வொரு காளான்களும் தலா 1¾ கிலோவுக்கும் மேல் இருந்தன. அந்த பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதில் அந்த காளான்கள் முளைத்துள்ளன.

இதுகுறித்து இளங்கோ கூறுகையில், ‘நம்பியூர் அருகே கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் என்னுடைய தோட்டத்தில் காளான்கள் முளைத்து உள்ளன. நான் முதல்முறையாக இவ்வளவு பெரிய அளவிலான ராட்சத காளான்களை பார்க்கிறேன். இதை பார்த்த எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் இந்த காளான்கள் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், சிலர் உண்பதற்கு ஏற்றது என்றும் தெரிவித்தனர்.
உடனே நான் இந்த காளான்களை கோபியில் உள்ள வேளாண் அலுவலகத்துக்கு எடுத்து சென்று கொடுத்தேன். அவர்கள் இதை ஆய்வு செய்து உண்பதற்கு ஏற்றவையா? இல்லையா? என கூறுவதாக தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அளவுக்கு காளான்கள் எவ்வாறு பெரிதாக வளர்ந்தது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று வேளாண் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்,’ என்றார். ராட்சத காளான்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
சத்தியமங்கலம் கொளத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி புஷ்பலதா (வயது 38). சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தியூர் பெரிய ஏரி அருகே வந்தபோது திடீரென்று மயில் ஒன்று பறந்து வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். இதில் புஷ்பலதா படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பலதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே நிலையத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம் இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் ரங்கம்பாளையம் பகுதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது ரெயில்வே தண்டவாளத்தில் அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்த கல்லில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல்லை அப்புறப்படுத்தினார். பின்னர் இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கும், ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டு ரெயிலை தொடர்ந்து இயக்கி சென்றார்.
ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இவர்கள் ரங்கம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று ரோந்து வந்தனர். அப்போது, அங்கு போதையில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு சென்னிமலைரோடு முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி பாய் சசிக்குமார் (வயது 21), ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் மதுபோதையில் ரெயில்வே தண்டவாளத்தில் கல்வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஜே.ஜே.நகர் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நபர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த நபர் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவருடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஸ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தியாபாளையம் கரைமேடு பகுதியில் 187 பேருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.