search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை

    ஈரோடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
    பவானிசாகர்:

    பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    கடந்த 3-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    105 அடி கொண்ட அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் 2 அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24,112 கனஅடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.


    Next Story
    ×