search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dye Waste Water"

    • ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது.
    • சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோ ழபுரம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணி முத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து செல்கிறது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவு நீர் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றி விடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப்படும் கழிவுநீர், நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவுநீர் கலந்து செல்வதால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயி கள் தெரிவிக்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அதனை தடுக்க முடியும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது கழிவுநீர் வெளியேற்று வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் திருமணிமுத்தாற்றில் ஆய்வு செய்தனர். சாய கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது

    சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்ட றையை கண்டறிந்து, அந்த பட்டறையை முடியும், மின் இணைப்பு துண்டிக்கப் பட்டும் வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனு மதி பெறாமல், சாயப்பட்ட றையின் கழிவுநீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அந்த பட்டறை மூடப்படும். கழிவுநீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும்.

    அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப்பட் டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையா ளர் மீது வழக்கு தொட ரப்படும். அந்த உரிமையாள ரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூ லிக்கப்படும்.திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீரை கலப்பதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.

    இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    திருப்பூர் :

    திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூா்பேட்டையைச் சோ்ந்த சகுந்தலா கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த சா்க்காா் பெரியபாளையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 15 சதவீத கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்து விடுகின்றனா். இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

    ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி சாா்க்காா் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று மதியம் சீனிவாசன்.போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.
    • தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். விவசாயி. இவரது தோட்டத்தில் போர்வெல் அமைத்து விவசாயம் செய்து வருகிறார், மேலும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.

    கடந்த ஒரு மாதகாலமாக தொடர் மழை பெய்து வந்ததால் போர்வெல்லில் தண்ணீர் எடுக்க வில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.

    தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. அவரும் ஒரு மணி நேரம் தண்ணீர் தொடர்ந்து மோட்டார் வைத்து எடுத்தும் தண்ணீர் நிறம் கறுப்பாகவே இருந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி உடனடியாக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி வார்டு கவுன்சிலர் மோகனசுந்தரி பழனிசாமி, சென்னிமலை யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த போர்வெல் கிணற்றில் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய சாய கழிவு கலந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி கள் இந்த சாய ஆலைகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    • நிறுவனங்களிலிருந்து சேகரமாகும் ரசாயனம், சாய வகைகள் உள்ளிட்டவை பேக்கிங் செய்து வரும் பாலிதீன் பைகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் நிலை உள்ளது.
    • நஞ்சராயன் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல்வேறு விதமான கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மறு சுழற்சியில் பயன்படுத்தும் கழிவுகள், ரசாயன கழிவுகள் என அவை உள்ளன.

    அவ்வகையில் சாய மற்றும் சலவை ஆலைகளில் பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களிலிருந்து சேகரமாகும் ரசாயனம், சாய வகைகள் உள்ளிட்டவை பேக்கிங் செய்து வரும் பாலிதீன் பைகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

    இவ்வாறான பாலிதீன் கவர்களை நிறுவனங்களிலிருந்து பெற்று வரும் நபர்கள் அவற்றை சுத்தம் செய்து கடைகள் மற்றும் மூலப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் பாலிதீன் கவர்களை ஜம்மனை ஓடையின் கரையில் வைத்து சுத்தம் செய்து அங்கேயே உலர வைத்து கடைகளுக்கு மீண்டும் பயன்படுத்த விற்பனை செய்யப்படுகிறது.

    நீர் மற்றும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் ரசாயனங்கள் இதில் இருக்க வாய்ப்புள்ளது. ஜம்மனை ஓடையின் கரையில் இது போல் ரசாயன பேக்கிங் பாலிதீன் கவர்கள் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுவது குறித்து உரிய துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் நஞ்சராயன் குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது. அப்போது நல்லாற்றில் வரும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்காமல் சுத்திகரித்து தேக்கி வைக்க கட்டமைப்பு நிறுவப்பட்டது.

    குளத்தின் மேற்கு எல்லையில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது; இருப்பினும் ஒருநாள் கூட செயல்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இந்நிலையில் குளத்தில் ஆய்வு செய்ய வந்திருந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், கூலிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் இதுகுறித்து முறையிட்டனர்.

    நல்லாற்றில் வரும் கழிவுநீரில் சாயக்கழிவு கலந்துவிடுகிறது. எனவே சுத்திகரிப்பு செய்த பிறகே குளத்தில் தண்ணீர் தேக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். விவசாய நிலத்தையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டுமென முறையிட்டனர்.

    சமூக ஆர்வலர் கிருஷ்ணசாமி அளித்த மனுவில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நஞ்சராயன் குளத்தின் முன்பகுதியில் உள்ள 8.90 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்து 8.90 ஏக்கரை மீட்டு குளத்துடன் சேர்க்க வேண்டும் என்று முறையிட்டார்.

    தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், குளத்தையொட்டியுள்ள நிலத்தை, தனியாருக்கு விற்பனை செய்துள்ளதை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். எனவே தனியாருக்கு வழங்கிய நிலத்தை மீட்டு பறவைகள் சரணாலயத்துடன் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. அவை செயல்பாட்டுக்கு வரும் போது குளத்துக்கு சுத்திகரித்த கழிவுநீர் மட்டும் வரும். சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். குளம் முழுமையாக சர்வே செய்து 310 ஏக்கர் நிலமும் மீட்கப்படும். அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிலத்தை மீட்க ஆவணம் செய்யப்படும் என்றார்.

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாடிவயல் அருகே உள்ள நண்டங்கரை தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாடி வயல் சின்னாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் உள்ள தரைப்பாலத்தை ஒட்டிய படி வெள்ளம் செல்கிறது.

    நொய்யல் வெள்ளம் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள வெள்ளலூர் அணைக்கட்டு பகுதியை நேற்று கடந்து சென்றது. அணைக்கட்டில் இருந்து ராஜ வாய்க்கால் மூலம் வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    அணைக்கட்டை தாண்டி வெளியேறும் நீரில் வெண்மை நிறத்தில் நுரை பொங்கியது. காற்று பலமாக வீசிய போது நுரை காற்றில் பறந்து அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ள விவசாய தோட்டங்களில் விழுந்தது.

    உடலில் நுரை படும் இடங்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், சாயக் கழிவுகள் கலக்கப்படுவதாலே ஆற்றில் நுரை பொங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    நொய்யல் ஆற்று தண்ணீரில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    நொய்யல் ஆற்றை ஒட்டி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியில் சாய சலவை ஆலையும் உள்ளது. இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும் போது நுரை பொங்கி சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 24 குளங்கள் உள்ளது. பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குமாரசாமி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், உக்குளம் ஆகிய 4 குளங்கள் நிரம்பி விட்டது.

    உக்கடம் பெரிய குளம், புதுக்குளம் ஆகியவை நிரம்பும் நிலையில் உள்ளது. கோலராம்பதி குளத்துக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளளவில் 75 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    ×