search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு அறைக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் கிருமி நாசினி அடித்த போது எடுத்த படம்.
    X
    தேர்வு அறைக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் கிருமி நாசினி அடித்த போது எடுத்த படம்.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 31 பேர் எழுதுகின்றனர்

    பிளஸ்-2 தேர்வு எழுதாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 31 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 24-ந்தேதி நடந்த தேர்வினை, கொரோனா பீதியாலும், ஊரடங்கு காரணமாகவும் ஏராளமானோர் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,002 மாணவ -மாணவிகள் இறுதி பொதுத்தேர்வினை எழுதவில்லை.

    இதைத்தொடர்ந்து தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளிடம் தேர்வு எழுத விருப்பம் கேட்கப்பட்டது. அதில் 23 மாணவிகளும், 7 மாணவர்களும் என 30 பேர் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 17-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், பள்ளிக்கூடங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு தேர்வு அறைக்கு மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஒருவர் கிருமி நாசினி தெளித்தார். மேலும் தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்து மையத்திலும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (அதாவது இன்று) 13 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 மாணவ -மாணவிகளும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பதால் மொத்தம் 31 மாணவ -மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்’ என்றனர்.
    Next Story
    ×