என் மலர்
செய்திகள்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி
ரூ.224 கோடியில் நடைபெற்று வரும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு
ரூ.224 கோடியில் நடைபெற்று வரும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் ரூ.224 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த திட்டத்தினால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோயில், நல்லாம்பட்டி, பள்ளாபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்துார் பேரூராட்சிகள் பயன்பெறுகின்றன,’ என்றார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் (குடிநீர் வழங்கல் துறை) தங்கவேல், கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






