என் மலர்
ஈரோடு
பவானிசாகர் அணை மற்றும் அதனையொட்டிய பூங்காவில் காலை முதலே ஏராளமான பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையின் அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
மேலும் பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களை வாங்கி சாப்பிட்டனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் பவானிசாகர் அணை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இன்று காலையும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பவானிசாகர் அணை பகுதிகளை கட்டியது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கு விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.
இன்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ. 900 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1500 முதல் ரூ.1600 வரை விற்பனையானது. இதனால் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80-க்கு விற்பனையானது.
காய்கறி மொத்த மார்க்கெட்டிலேயே தக்காளி சில்லரை விலையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் மற்ற இடங்களில் மேலும் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி புதுவை அரசு துறைகள் சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை முதல்- அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).
ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.
ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5 பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சத்தங்கள் எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. குண்டேரிப்பள்ளம் அணையானது 42 கனஅடி கொள்ளளவு கொண்டது.
அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.
இந்நிலையில், குன்றி, கம்மனூர், விளாங்கோம்பை மற்றும் கல்லூத்து ஆகிய வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு செக் டேம் வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர்.
நிரம்பி வழியும் குண்டேரிபள்ளம் அணையில் ஆபத்தை உணராமல் சிலர் மீன் பிடித்த காட்சி.
சுசீந்திரம்:
சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செழியன். இவரது மகன் பூபதி(வயது33). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், அங்கிருந்து ஊருக்கு வந்துவிட்டார். பின்பு வெளிநாட்டுக்கு திரும்பி செல்லாமல் இங்கேயே பெயிண்டராக வேலை பார்த்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பூபதி சுசீந்திரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். தனது நண்பர் ஒருவரும் வருவார் என்று கூறி தங்கியிருந்த அவர், நேற்று இரவு வரை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் விடுதியின் உரிமையாளர் அறையின் கதவை தட்டிப் பார்த்தார்.
கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அறையின் உள்ளே இருந்து யாரும் சத்தம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அது பற்றி சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தனர்.
அப்போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் பூபதி பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பூபதியின் செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் யாருக்கெல்லாம் போனில் இருந்து பேசியுள்ளார்? யாரிடம் அதிகநேரம் பேசியிருக்கிறார்? என்று ஆய்வு செய்தனர்.
அதில் சிலரிடம் அதிக நேரம் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூபதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆகவே அவருக்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.
தீவிரமாக பெண் பார்த்து வந்த நிலையில், கடந்த 16 நாட்களுக்கு முன்பு அவரது தாத்தா இறந்துவிட்டார். இதனால் பூபதிக்கு பெண் பார்ப்பதை அவரது குடும்பத்தினர் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பூபதி தற்கொலை செய்திருப்பதால் காதல் விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து மர பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலத்துக்கு புறப்பட்டது. லாரியை குடகு மாவட்டம், கூடுமங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சாகர் (22) என்பவரும் உடன் வந்தார்.
லாரி ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில் வந்தது. இந்த பகுதிகளில் மழை பெய்து இருந்ததால் அந்த பகுதியில் உள்ள மண்ணில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைந்தது. அதனால் லாரியை மஞ்சுநாதனால் தொடர்ந்து இயக்க முடியவில்லை.
இது குறித்து மஞ்சுநாதன் லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். லாரி உரிமையாளர் 3 பேரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியை மீட்க கிரேன் அழைத்து வருவதாக உரிமையாளர் மற்றும் அவருடன் வந்த 3 பேர் சென்று விட்டனர். மஞ்சுநாதன், சாகர் மட்டும் லாரியில் இருந்தனர்.
இதனையடுத்து பாரம் தாங்காமல் சக்கரம் மண்ணில் இறங்கவே, லாரியின் பாரத்தைக் குறைக்கும் வகையில் டிரைவர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறினார். மரக்கட்டைகளை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சித்தார். அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பி மீது மஞ்சுநாதன் கைப்பட்டது.
இதனால் மஞ்சுநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெருமாள்கோவில் கிராமத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டு சந்தை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல சேலம் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. அதனால் இன்று கூடிய சந்தையில் மாடுகள், எருமைகள் மற்றும் வளர்ப்பு கன்றுகளின் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். வளர்ப்பு பசு கன்றுகள், எருமை கன்றுகளை விவசாயிகள் வளர்ப்பதற்காக வாங்கி சென்றனர். கேரளா, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநில வியாபாரிகள் அதிக அளவில் மாடுகள் வாங்கி சென்றனர்.
கன்றுக்குட்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலும், எருமை மற்றும் காளை ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தைவிட ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூடுதலான விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதனால், இன்று கூடிய சந்தையில் 11 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நேற்யை தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தில் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை குதூகலத்துடன் கொண்டாட மது பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்த உடன் மது பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
இதனால் மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் சற்றும் ஓய்வற்ற நிலையில் மது பிரியர்களுக்கு தொடர்ந்து மது பாட்டில்களை எடுத்து கொடுத்த வண்ணம் இருந்தனர்.
சிலர் மதுவை அதிகம் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதை மறந்து சாலைகளில் விழுந்து கிடந்தனர். ஒருசிலர் மது பாட்டில்களை பெட்டிகளில் வாங்கி கொண்டு பரபரப்பாக அங்கும் இங்குமாய் உலாவிக் கொண்டிருந்தனர். திருச்சி மண்டலத்தை பொருத்தமட்டில் 12 மாவட்டங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இந்த திருச்சி மண்டலத்தில் நேற்றைய தினம் மது விற்பனை அமோக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-
தொடர்ந்து இயல்பான நாட்களில் திருச்சி மண்டலத்தில் சுமார் ரூ.30 கோடி அளவில் மதுபானம் விற்பனை செய்யப்படும். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை என்பதால் மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் 2 தினங்களுக்கு முன்பே மதுபானங்கள் அதிகமாக விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் இரவு 8 மணி வரையில் திருச்சி மண்டலத்தில் ரூ.56 கோடியே 82 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தீபாவளி பண்டிகை நேற்று ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர்.
பொதுவாக பண்டிகை என்றாலே குடிமகன்கள் தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் பண்டிகைக்கு முதல் நாள் இரவு மது விற்பனை அமோகமாக நடைபெறும்.
தீபாவளி, புது வருடம், பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்கு முதல் நாள் இரவு குடிமகன்கள் மதுக்கடைகளில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிக் கொண்டு செல்வார்கள். இதனால் பண்டிகை நாட்களில் மட்டும் பல கோடி மதிப்பில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகள் உள்ளன. பார் வசதியுடன் 100 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் மட்டும் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் அதேநேரம் பண்டிகை காலங்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால் மாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது. குடிமகன்கள் பிராந்தி, பீர், ஒயின் வகைகளை வாங்கிச் சென்றனர்.
தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.
இந்தநிலையில் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்தார். இந்த பேரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாக கூறியிருந்தார்.
பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதில் பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
பின்னர் கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்.






