search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shah Rukh Khan Son"

    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
    மும்பை :

    மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் சோதனை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் போதை பொருள்வழக்கில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைதான அர்பாஸ்மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அப்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவின் முன் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று ஆர்யன் கான் தென்மும்பையில் உள்ள போதை பொருள் அலுவலகத்தில் ஆஜரானார். மாடல் அழகு முன்முன் தமேச்சாவும் ஆஜரானார்.

    இதேபோல ஆர்யன் கான் நேற்று நவிமும்பையில் போதை பொருள் சிறப்பு புலனாய்வு பிரிவிலும் ஆஜரானார். அவர் போதை பொருள் வழக்கு தொடர்பாக துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான குழுவினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும் அதிகாரிகள் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

    போதை பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சொகுசு கப்பல் வழக்கு உள்பட 6 வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதில் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்யன் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஆஜராகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
    மும்பை :

    போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இந்தநிலையில் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்தார். இந்த பேரம் தொடா்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ந்தேதி சந்தித்து பேசியதாக கூறியிருந்தார்.

    பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டில் கூறியது போல, கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிகவளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    ஆர்யன்கான், ஷாருக்கான்

    இதில் பூஜா தத்லானியின் கார் என கூறப்படும் நீல நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் இருந்து இறங்கும் பெண் ஒருவர், கிரன் கோசவியிடம் பேசும் காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    பின்னர் கிரன் கோசவி, அந்த பெண், சாம் டிசோசா ஆகிய 3 பேரும் அவர்களது வாகனங்களில் தனித்தனியாக அங்கு இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளில் 3 பேரும் சந்தித்து பேசியது மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை" என்றார்.

    இதேபோல கிரன் கோசவியின் காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதும் தெரியவந்து உள்ளது. எனவே போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

    ×