என் மலர்

    நீங்கள் தேடியது "Pondicherry Independence Day"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் பின்புறம் 75 எந்திரம் பொருத்திய கட்டுமரங்களின் அணி வகுப்பு இன்று நடந்தது.
    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி புதுவை அரசு துறைகள் சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதுபோல் புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் பின்புறம் 75 எந்திரம் பொருத்திய கட்டுமரங்களின் அணி வகுப்பு இன்று நடந்தது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி


    இதனை முதல்- அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அணிவகுப்பில் பங்கேற்ற மீனவர்கள் தங்களது படகில் தேசிய கொடியை ஏற்றி காந்தி சிலை அருகே கடலில் வலம் வந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை விடுதலை நாள் விழா புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலையில் புதுவை பகுதி மட்டும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து புதுவை பிரெஞ்சு ஆட்சியின் கீழே செயல்பட்டு வந்தது.

    பின்னர் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்தது.

    இந்த நாளை புதுவை விடுதலை நாளாக அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

    அதன்படி இன்று புதுவை விடுதலை நாள் விழா புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    புதுவை விடுதலை நாளையொட்டி இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. #PondicherryCM #Narayanasamy
    ×