என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை தொட்டு உள்ளது.
- தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.27 அடியாக உள்ளது. நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.
இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அணை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை தொட்டு உள்ளது.
தற்போது 28- வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.33 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.44 அடியாக உள்ளது.
+2
- மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
- இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொடுமுடி:
சின்னசேலம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அடுத்து பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந் தேதி இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.
போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பள்ளி அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்திற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி இளைஞர்கள் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாகண்டனூரை சேர்ந்த 2 வாலிபர்கள் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சின்னாக்கண்டனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) கட்டிட மேஸ்திரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (19). பிளஸ்-2 படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக கூலி வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். எந்த நேரமும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வந்தனர்.
அப்போதுதான் கள்ளக்குறிச்சியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அறிந்து அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி தங்களது வாட்ஸ்அப் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பி சேலம் ரெயில்வே சந்திப்பில் ஒன்று கூடி அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இவர்களது இந்த வாட்ஸ்அப் தகவல் குறித்து கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கொடுமுடி போலீசார் ஸ்ரீதர் மற்றும் அசோக்கை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு தகவல் அனுப்பி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது.
- இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 523 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
- இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.
அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.
மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.
இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
- போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, மொடக்குறிச்சி, வரப்பாளையம் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பவானி ரோடு, நெரிகல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.
- மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கொடுமுடி:
கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (38) கரும்பு லோடு ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று மதியம் 2.30 மணி அளவில் கிளாம்பாடி இரும்பு பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.
இதில் ஓட்டுநர் பாலசுப்பிரமணினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
- நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார்.
- போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள கவு ண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு காலில் மூட்டு வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வைத்தியம் பார்ப்பது சம்பந்தமாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாட்டு வைத்தியர் ஒருவர் இதற்கு நல்ல மருந்து கொடுத்து எளிதில் குணப்படுத்துவதாக அவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் கூறி உள்ளார்.
இதையடுத்து நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார். இதை குமாரசாமி நம்பியுள்ளார்.
இதையடுத்து நாட்டு வைத்தியர் குமாரசாமி அவரது மனைவி மற்றும் மகனிடம் பவுடர் போன்ற ஒரு பொடியை கலந்து அவர்களது கால் மற்றும் உடலில் தடவி உள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் சுய நினைவை இழந்து வீட்டில் வைத்திருந்த பணம் 48 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ¾ பவுன் தங்கதோடு ஆகியவற்றை அவர்களே அந்த நபரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு சரியான சுயநினைவு இல்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கத்தோடு ஆகியவை காணாமல் போனதை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களில் அந்த நாட்டு வைத்தியர் குறித்து விசாரணை செய்துள்ளனர்.
அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தால் இறுதியாக குமாரசாமி சென்னிமலை போலீசில் இந்த மோசடி குறித்து புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி பணம் மற்றும் தங்க தோடை மோசடி செய்து எடுத்துச் சென்ற அந்த நபரை பற்றி விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் தொட்டியம், தெற்கு ஆரங்கூர், முல்லை நகர் பகுதியை சேர்ந்த போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
- மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை சுற்று வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவ ர்கள் கேத்தம்பாளையத்தை சேர்ந்த செல்வன் (40), ரமேஷ் (39), பழனிசாமி (42), மேட்டுக்கடையை சேர்ந்த மணி (62), சுந்தரம் (60), முருகேசன் (33), நாகராஜ் (37), பிரசாந்த் (30) என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல சத்தியமங்கலம் குள்ளன்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டில் சூதாடியதாக ஜெகதீஸ்வரன் (54), சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற கருப்புசாமி (40), கிரண் (32), சம்பத்குமார் (43), ஜெகநாதன் (45), ராமலிங்கம் (40), ரமேஷ் (34), ரவி (42) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.7,755 பறிமுதல் செய்யப்பட்டது.
- விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூர், மற்றும் தருமபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 879-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 919-க்கும் என ஏலம் போனது. மொத்தம் சுமார் 3 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானது.
இதனை ஆந்திர மாநில வியாபாரிகள் மற்றும் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.






