பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது

கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடத்தூர் மேட்டுக்கடை பகுதியில் உள்ள டீ கடையின் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை சுற்று வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவ ர்கள் கேத்தம்பாளையத்தை சேர்ந்த செல்வன் (40), ரமேஷ் (39), பழனிசாமி (42), மேட்டுக்கடையை சேர்ந்த மணி (62), சுந்தரம் (60), முருகேசன் (33), நாகராஜ் (37), பிரசாந்த் (30) என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சத்தியமங்கலம் குள்ளன்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டில் சூதாடியதாக ஜெகதீஸ்வரன் (54), சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற கருப்புசாமி (40), கிரண் (32), சம்பத்குமார் (43), ஜெகநாதன் (45), ராமலிங்கம் (40), ரமேஷ் (34), ரவி (42) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.7,755 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com