search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer saying"

    • நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார்.
    • போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள கவு ண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

    இவருக்கு காலில் மூட்டு வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வைத்தியம் பார்ப்பது சம்பந்தமாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாட்டு வைத்தியர் ஒருவர் இதற்கு நல்ல மருந்து கொடுத்து எளிதில் குணப்படுத்துவதாக அவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் கூறி உள்ளார்.

    இதையடுத்து நாட்டு வைத்தியர் என்று சொல்லி அங்கு வந்த ஒரு நபர் குமாரசாமிக்கு காலில் உள்ள மூட்டு வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்வதாக கூறினார். இதை குமாரசாமி நம்பியுள்ளார்.

    இதையடுத்து நாட்டு வைத்தியர் குமாரசாமி அவரது மனைவி மற்றும் மகனிடம் பவுடர் போன்ற ஒரு பொடியை கலந்து அவர்களது கால் மற்றும் உடலில் தடவி உள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் சுய நினைவை இழந்து வீட்டில் வைத்திருந்த பணம் 48 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ¾ பவுன் தங்கதோடு ஆகியவற்றை அவர்களே அந்த நபரிடம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு சரியான சுயநினைவு இல்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கத்தோடு ஆகியவை காணாமல் போனதை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களில் அந்த நாட்டு வைத்தியர் குறித்து விசாரணை செய்துள்ளனர்.

    அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தால் இறுதியாக குமாரசாமி சென்னிமலை போலீசில் இந்த மோசடி குறித்து புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி பணம் மற்றும் தங்க தோடை மோசடி செய்து எடுத்துச் சென்ற அந்த நபரை பற்றி விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் தொட்டியம், தெற்கு ஆரங்கூர், முல்லை நகர் பகுதியை சேர்ந்த போலி நாட்டு வைத்தியர் ஊமைத்துரை (49) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×