என் மலர்
ஈரோடு
- பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிரமணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள கொளத்தான்வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியம் (70). இவர் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
அப்போது பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிர மணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணை ப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
- நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
- அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டி யது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணை யில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது.
ஆனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசன த்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகவும் உள்ளது.
- மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
- இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் சாலையில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 4 மாடுகள் வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு பிக்அப் வாகனத்தின் மூலம் மாடுகளை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு சிலர் மாடுகளை பிடித்து கொண்டிருந்தனர்.
மாடு சத்தமிடுவதைபார்த்த தோட்டத்தில் இருந்த முதியவர் சத்தம் போட்டார். மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
மீண்டும் முதியவர் சத்தமிடுவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த மாடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாகனத்தையும் மாடுகளையும் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர். இதில் அந்த நபர்கள் அந்தியூர் பர்கூர் சாலையில் புரோட்டா கடை நடத்தி வருவது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இதேபோல் எந்தெந்த இடத்தில் மாடுகளை திருடியுள்ளார்கள், வேறு ஏதேனும் திருட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
- இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையாகும். இந்த அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதியும் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுக்க கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் அணையை சீரமைக்க 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்க ப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அணை பகுதியில் கான்கிரீட் தளம் போட ப்பட்டதால் உயிர் பலி தடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தைரி யமாக அணையில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக அணை க்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமை யாக வெளியேற்றப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட 25 ஆயிரம் கன அடி உபரி நீரால் கொடிவேரி அணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பெருக்கெடுத்து சென்றது.
இதனால் கொடிவேரி தடுப்பணையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அணை பகுதியில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொடிவேரி அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் துண்டுகளும், கம்பிகளும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிக்க முடியாத நிலையில் அணையின் ஒரு ஓரமாக குளித்து வரு கின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட கான்கிரீட் தளம் மழை வெள்ளத்திலேயே அடித்து செல்லப்பட்டது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கானகிரீட் தளம் மற்றும் சேதமான பகுதிகளை நவீன எந்திரங்கள் மூலம் பொது ப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வரு கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதில் விரைவில் அப்பகுதியில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 142 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
- காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு பஞ்சாலை க்கழகத்தின் மூலம் விசைத்தறி கூடம் அமைக்கப்பட்டது.
இங்கு பள்ளி மாண வர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் சீருடைகள். போலீஸ் சீரு டைகள், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.
தறி ஓட்டுபவர்கள், வைண்டிங்மேன், கிளீனர், ஜாப்பர், ஹெல்ப்பர், தோட்டக்காரர் என 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தினமும் 3 சிப்ட் இயங்கி வந்தநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
இதனால் கடந்த 20 ஆண்டுகள் முன்பு 44 தறிகள் கொண்ட ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு, தொழி லாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டு 48 தறிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.
புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட வில்லை. சம்பளம் பற்றாக்குறை யால் தொழி லாளர்கள் பலர் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் வெறும் 24 தறிகள் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போது இயங்கும் தறிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைந்து உள்ளது. இதை மட்டுமே நம்பி சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 20ஆக குறைந்து விட்டது.
தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 430 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை.
இந்நிலையில் நிர்வாக த்தின் சார்பில் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் தற்பொழுது தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான சிவகிரி விசைத்தறிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 73 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விசைத்தறிக்கூடம் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த விசைகூடம் தொடர்ந்து லாபத்தில் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிறுவனத்தை லாபத்தில் இயக்க ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்.
அந்த குழுவில் தொழிலாளர்களை முன் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார்.
- இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வருகிற 25-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.
அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறார்.
மறுநாள் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை சரளை அருகே நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சோலார் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட கனிமார்க்கெட் ஜவுளி சந்தை வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சியின் வணிக வளாகம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.
விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு விழா மேடை பயனாளிகள் அமரும் இடம் பொதுமக்கள் கட்சியினர் பங்கேற்கும் வளாகம், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் வாகன நிறுத்தம், சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, குறிஞ்சி. சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(32) கட்டிட கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவயானி (25).
இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா என்ற 3 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்பு தூங்க சென்று விட்டனர். அதிகாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் எழுந்து வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் காலை வெகு நேரமாகியும் தேவயானி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதன் பின்பு தேவயானியின் தாய் ரமணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து ரமணி அம்மாபேட்டை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- செல்போன் வெடித்து அர்ஜூன் பலியானதை அடுத்து சம்பவ இடத்தில் இன்று காலை தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
- செல்போன் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜூன் (34). பி.ஏ. பட்டதாரியான இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு யஸ்வந்த் (13), விவின் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
யஸ்வந்த் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பும், விவின் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் உள்ளிட்ட சிலர் இந்த பகுதியில் இடத்தை வாங்கினர். அதில் அர்ஜூன் சிமெண்ட் ஷீட்டால் மேயப்பட்ட வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அந்த வீட்டின் அருகேயே சிறிதாக சிமெண்ட் ஷீட் போடப்பட்டு சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு போடப்பட்டு சிறிய வீடு ஒன்றையும் கட்டி உள்ளார்.
நேற்று இரவு அர்ஜூன் தனது 2-வது மகன் விவினை அதே பகுதியில் உள்ள தனது தாய் கனகராணி என்பவரது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்தார். ஒரு வீட்டில் அர்ஜூனின் மனைவி கஸ்தூரி, மூத்த மகன் யஸ்வந்த் ஆகியோர் தூங்கிக் கொண்டு இருந்தனர். மற்றொரு வீட்டில் அர்ஜூன் மட்டும் தனியாக தூங்கினார்.
அப்போது அர்ஜூன் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் திடீரென செல்போன் வெடித்து அவர் தங்கி இருந்த வீட்டில் தீப்பிடித்தது. மேலும் அவர் மீதும் தீப்பற்றியது.
நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால் அர்ஜூன் தங்கி இருந்த குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.
அர்ஜூனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனாலும் உடல் முழுவதும் தீப்பிடித்த அர்ஜூனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தனது மனைவி கண் முன்னே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் முருகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
பின்னர் பலியான அர்ஜூன் உடலை மீட்டனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் வெடித்து அர்ஜூன் பலியானதை அடுத்து சம்பவ இடத்தில் இன்று காலை தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். செல்போன் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
- மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 49 ஆக இருந்த நிலையில் நேற்று திடீரென 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவ ட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து O92 பேர் பாதிப்பில் இருந்து குண மடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
- வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
- அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது.
சூரம்பட்டி:
ஈரோடு அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் இன்று காலை திவ்ய பாரதி வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு அவரை கடித்தது.
தன்னை பாம்பு கடித்தது என்று திவ்ய பாரதிக்கு தெரிய வில்லை. பூரான் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.
இதைதொடர்ந்து அவர்கள் திவ்ய பாரதியை அருகே உள்ள ஒருவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.
இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர் திவ்ய பாரதி இறந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்ய பாரதியின் கணவர் ரகுநாதன் மற்றும் மாமியார் அங்கேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருமணமாகி 4 வருடமே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ விசார ணை நடந்து வருகிறது. இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து திவ்ய பாரதியை பாம்பு தான் கடித்த என்ற தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார்.
அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த திவ்ய பாரதியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண்ணை கடித்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.






