முதியவரை கட்டிப்போட்டு மாடு திருட முயன்ற கும்பல் சிக்கியது

மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர்.
முதியவரை கட்டிப்போட்டு மாடு திருட முயன்ற கும்பல் சிக்கியது
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் சாலையில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 4 மாடுகள் வளர்த்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு பிக்அப் வாகனத்தின் மூலம் மாடுகளை திருடி விற்பனை செய்வதற்காக அங்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு சிலர் மாடுகளை பிடித்து கொண்டிருந்தனர்.

மாடு சத்தமிடுவதைபார்த்த தோட்டத்தில் இருந்த முதியவர் சத்தம் போட்டார். மாடு திருடும் கும்பல் முதியவரின் கைகளை கட்டி போட்டுவிட்டு மாடுகளை பிடித்து சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

மீண்டும் முதியவர் சத்தமிடுவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த மாடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாகனத்தையும் மாடுகளையும் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர்களை விரட்டி பிடித்தனர். இதில் அந்த நபர்கள் அந்தியூர் பர்கூர் சாலையில் புரோட்டா கடை நடத்தி வருவது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இதேபோல் எந்தெந்த இடத்தில் மாடுகளை திருடியுள்ளார்கள், வேறு ஏதேனும் திருட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com