வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிரமணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள கொளத்தான்வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியம் (70). இவர் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது பெருந்துறை வாய்க்கால் மேடு, கீழ்பவானி வாய்க்காலில் சுப்பிர மணியத்தின் உடல் மிதப்பதாக பெருந்துறை தீயணை ப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுப்பிரமணியத்தக்கு குடி பழக்கம் இருப்பதாகவும், அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com