என் மலர்
ஈரோடு
- 2 வாலிபர்கள் பழுதடை ந்ததால் கழற்றி வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு குடோனில் இருந்து தப்பியோடினர்.
- இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் கெமிக்கல் குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது.
நேற்றிரவு இந்த குடோனிற்குள் நுழைந்த 2 வாலிபர்கள் பழுதடை ந்ததால் கழற்றி வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு குடோனில் இருந்து தப்பியோடினர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் துரத்தி சென்று பிடித்து வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசார ணையில் பிடிபட்டவர்கள் ஈரோடு சின்னசேமூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி (23), வீரப்பன்சத்திரம் கண்ணதாசன் வீதியை சேர்ந்த சதாம்உசேன்(25) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சேலம் மாவட்டம் எடப்பாடி தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 29). இவர் அவிநாசி பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவர் தனது ஓட்டலுக்கு சப்ளையர் தேவைப்படு வதால், இது சம்பந்தமாக ஈரோட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் வேலை முடித்து அவினா சியை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
பெருந்துறை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்க ம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
- இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.
தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.
இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அதிகாலை வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.
- இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் நஞ்சப்பன் என்கிற குமார் (வயது 47)/ தி.மு.க., பிரமுகரான இவரின் வீடு அம்மாபாளையம் ஆலமரம் அருகே உள்ளது. இந்த புது வீட்டில் யாரும் குடியில்லை.
குமார் அம்மாபாளையம் அரசு பள்ளி எதிரில் மளிகை கடை நடத்தி வருவதால் அதன் அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஆலமரம் அருகே உள்ள வீடு ஒரு மாதமாக பூட்டி கிடக்கிறது. இந்த வீட்டில் நேற்று இரவில் மர்ம நபர்கள் மெயின் கேட் ஏறி குதித்து உள்ள சென்று உள் கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.
வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் திருட வந்த மர்ம நபர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாற்றத்தினை பொறுத்து கொள்ள முடியாத மர்ம நபர்கள் அருகில் கைவரிசை காட்டிஉள்ளனர்.
அந்த வீட்டின் அருகே சதாசிவம் வயது (44) என்பரின் டீ கடை உள்ளது. டீ கடையினை நேற்று வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து இரவு பூட்டி விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.
உள்ள சென்று பார்த்த போது மர்ம நபர்கள் இரவு கடையின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ள சென்று ரொக்க பணம் சுமார் ரூ. 25 ஆயிரம் திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த சிகரெட் மற்றும் பீடி பண்ட ல்களையும் திருடியுள்ளனர். திருடிய சிகரெட், பீடிகளை அருகே குப்பையில் வீசி சென்று விட்டனர்.
இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சரவணன், பெருந்துறை ஏ.டி.எஸ்.பி., கவுதம் கோயல் ஆகியோர் நேரில் வந்து பார்வை யிட்டனர்.
கை ரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது.
இந்த நாய் அம்மா பாளையத்தில் இருந்து சென்னிமலை டவுன் வரை ஓடி வந்தது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
சென்னிமலை பகுதியில் தொடர்ந்து இதே போல் 3 இடங்களில் தொடர்ந்து பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சென்னிமலை நகர மக்களுக்கு பெரும் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நள்ளிரவில் நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி:
பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை தந்தை பெரியார் வீதி கீரைக்கார தெரு மற்றும் பாலக்கரை வீதி போன்ற பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளை அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக த்தினர் தங்க வைத்து பல்வேறு வகையான அத்தி யாவசிய தேவைகளையும் செய்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதி க்கப்பட்ட பொதுமக்களை ஈரோடு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் பிரகாஷ் கந்தன் பட்டறை மற்றும் பவானி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாம் போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ஒரு சிலர் தாங்கள் பணம் கட்டி பல மாதங்கள் ஆகியும் தங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவ குடும்பத்தினர் தங்களுக்கு இதே பகுதியில் வீடு ஒதுக்கிட வேண்டும் எனவும் மாற்று இடங்கள் சென்றால் எங்களால் மீனவ தொழிலில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அரசு ஒதுக்கீடு செய்யும் அடுக்கு மாடி குடியிருப்பு தொகை ரூ.80 ஆயிரம் கட்ட மிகுந்த சிரமம் உள்ளதால் அரசு கடன் உதவி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவி த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இள ங்கோவன், ஆணையாளர் தாமரை, கவுன்சிலர் சரவணன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- வேதனையால் துடித்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பெரியவீரசங்கீ, லட்சுமி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). இவரது மனைவி வசந்தா (55). வசந்தாவுக்கு கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையால் துடித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தாவை சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். பின்னர் வசந்தா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென வசந்தா உடல்நிலை மோசமானது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
- அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
பவானி:
பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
- மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர்.
- கவின்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கவின்ராஜ். கறிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்போன் மூலம் கவின்ராஜுக்கு லக்காபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவின்ராஜ் அடிக்கடி அந்த மாணவியுடன் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கவின்ராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். தற்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை கவின்ராஜ் ஈரோடுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- சாலையில் சென்ற நபர்கள் ரகளை செய்த பெண்ணை பிடித்து ஓரமாக விட்டாலும் மீண்டும் சாலையில் நடுவே வந்து படுத்துக் கொண்டு ரகளை செய்தார்.
- நியாயமான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையில் படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டின் நடுவே படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
இதை பார்த்தவர்கள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களோ? என்று அருகில் சென்று அந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அந்தப் பெண் மது போதையில் சாலையில் படுத்து கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தது தெரிய வந்து. இதையடுத்து சாலையில் சென்ற நபர்கள் அந்தப் பெண்ணை பிடித்து ஓரமாக விட்டாலும் மீண்டும் சாலையில் நடுவே வந்து படுத்துக் கொண்டு ரகளை செய்தார்.
அப்போது அந்தியூர் பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் 15 ரூபாய் அதிகம் வாங்குவதாகவும், அதனை வாங்குவதற்கு பத்து ரூபாய் பத்தாமல் மற்றவர்களிடத்தில் கேட்டு மிகவும் சிரமப்பட்டு மதுபாட்டிலை வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனை நியாயமான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையில் படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வந்து அந்த பெண்ணை சாலையை விட்டு ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
- பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
- இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த கோட்டை மாரியம்மன் மற்றும் முனியசாமி கோவில் சோழர்கால முதற்கொண்டு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரக்கூடிய முதல் புதன்கிழமை அன்று சுவாமிக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் திருவிழாவாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் விழாவிற்கு பெருந்துறை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.
மேலும் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பெருந்துறை தீயணைப்பு நிலையத்தினர் தீயணைப்பு வாகனத்தை கோவில் வளாகத்தில் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை செயல்பட தொடங்குகிறது.
- இந்த சந்தைகளில் தானியங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்.
ஈரோடு:
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளா ண் வணிகத்துறை மூலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
வெளி மார்க்கெட்டு களை விட உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை மலிவாக கிடைப்ப தால் உழவர் சந்தை மக்களி டம் பெரும் வரவேற்பு பெற்றது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர உழவர் சந்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி ஈரோடு மாவ ட்டத்தில் முதன்முறையாக சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று முதல் மாலை நேர உழவர் சந்தை செயல்பட தொடங்குகிறது.
இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர்கள் சாவித்ரி, சண்முகசுந்தரம் ஆகியோர் கூறியதாவது:
தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான மாலை நேர உழவர் சந்தை இன்று முதல் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் செயல்பட உள்ளது. மாலை நேர உழவர் சந்தை தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இந்த சந்தைகளில் பருப்பு வகைகள், பயறு வகைகள், தானியங்கள், காளான், உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






