search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on the occasion of Diwali"

    • தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.
    • இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆடு, கோழி, மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை தமிழகத்தில் 2-வது பெரிய சந்தையாகும்.

    தற்போது புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளி பண்டிகை வருவதால் நேற்று விற்பனைக்கு ஏராளமான ஆடு, கோழிகள், மாடுகள் கொண்டு வரப்பட்டது.

    இதை வாங்க ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி, மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இதேபோல் மாடுகளும் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. இன்று காலையும் ஆட்டுசந்தை நடந்தது.

    இதிலும் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் தீபாவளி யை யொட்டி ஆடு, கோழி, மாடுகள் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • வரும் 22-ந்தேதி வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 22-ந்தேதி (சனிக்கிழமை) வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது. தேங்காய் ஏலம் வழக்கம்போல நடைபெறும்.

    இந்த தகவலை மேலாண்மை இயக்குனர் ஆர். சுரேஷ், பொதுமேலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×