என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் விஷம் குடித்து தற்கொலை
- சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- வேதனையால் துடித்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பெரியவீரசங்கீ, லட்சுமி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). இவரது மனைவி வசந்தா (55). வசந்தாவுக்கு கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையால் துடித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தாவை சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். பின்னர் வசந்தா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென வசந்தா உடல்நிலை மோசமானது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






