search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய கறிக்கடை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
    X

    கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய கறிக்கடை தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

    • மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர்.
    • கவின்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள முத்து கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கவின்ராஜ். கறிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்போன் மூலம் கவின்ராஜுக்கு லக்காபுரத்தை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவின்ராஜ் அடிக்கடி அந்த மாணவியுடன் செல்போனில் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கவின்ராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். தற்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை கவின்ராஜ் ஈரோடுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் மொடக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×