என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.
    • இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. அந்தியூர் அருகே உள்ள அண்ணமார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (36). செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகின்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வேலுமணி அவரது 2 குழந்தைகள் மற்றும் மனைவி நித்தியா ஆகியோர் மழையின் போது வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. விழும் சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு கணவன், மனைவி இருவரும் எழுந்துள்ளனர்.

    இதனையடுத்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுவதை பார்த்தவுடன் 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனை தொடர்ந்து பக்கத்து வீடான அவரது நண்பர் குணசேகர் என்பவரது வீட்டில் இரவு முழுவதும் 4 பேரும் தங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தவசியப்பன், ஊராட்சி செயலாளர் கேசவன் (பொறுப்பு ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

    • இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதையடுத்து பெரும்பள்ளம் கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக சென்னிமலை ரோடு சேனாதிபதி பாளையம், தொட்டிபாளையம், பெரிய சடையம்பாளையம் பகுதிகளில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில் ஸ்டோனி பிரிட்ஜ் அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இதன் அருகே கரையோர பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து பெரும்பள்ளம் கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு இந்த பகுதி பொது மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    இதேப்போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பெரும்பள்ளம் ஓடையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர் மழை காரணமாக ஈரோடு கரட்டிபாளையத்தில் உள்ள ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் சென்னிமலை ரோடு பகுதி முழுவதும் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். 

    • நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    ஈரோடு:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் முழு அளவு உபரி நீரும், காவிரியில் திறக்கப்படுகிறது.

    கடந்த 5 நாட்களாக காவிரியில் அதிகமாக தண்ணீர் சென்றதால் ஈரோடு மாவட்ட காவிரி கரை ஓரங்களில் வசிப்போ ருக்கு வெள்ள அபாயம் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரையில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் நீர் சூழ்ந்தது.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 12 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 700 பேர் வரை முகாமில் பாதுகா ப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய வசதியை மாவட்டம் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்க ப்பட்டது.

    கடந்த இரு தினங்களுக்கு முன், 1.95 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றது. நேற்று முன்தினம் இரவில், 65,000 கனஅடியாக குறைந்ததால் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஈரோட்டில் மட்டும் 50 பேர் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் நேற்று மதியத்துக்கு பின் 65,000 கனஅடியில் இருந்து மாலை 4 மணிக்கு 95,000 கனஅடியாகவும், 5.30 மணிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும் தண்ணீர் வெளியேற்றம் உயர்ந்துள்ளது. அத்துடன் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மழை நீரும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள 2,500 கனஅடி நீரும் காவிரியில் கலப்பதால் 1.10 லட்சம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முகாம்களில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த மக்கள் இன்று மீண்டும் முகாம் நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றுக்கு மேலும் அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
    • அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம், டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்ப வரது மகன் செந்தில்குமார். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகிறார்.

    தென்னை மரங்களுக்கு கீழ் தகர சீட்டு கொண்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் வடமாநிலத்தவர்கள் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அப்போது செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது திடீரென இடி விழுந்தது. இதில் அந்த தென்னை மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதை தொடர்நது மரத்தில் இருந்து நெருப்பு பொறிகள் கீழே இருந்த குடியிருப்பு பகுதியின் மீது விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த வர்கள் உடனடியாக பெரு ந்துறை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் தென்னை மரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணை த்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவாமல் தடு த்தனர்.

    • ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
    • ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உயிர் நீத்த காவலர்களின் நினைவுவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    மொடக்குறிச்சி:

    காவல்துறையில் உயிர் நீத்த காவலர்களுக்கான காவலர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உயிர் நீத்த காவலர்களின் நினைவுவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் மதுபாலன், ஏ.டி.எஸ்.பி.க்கள் பாலமுருகன், கனகேஸ்வரி, ஜானகிராமன் ஆயுதப்படை டி.எஸ்.பி. சக்திவேல் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து உயிர்நீத்த காவலர்களுக்காக மரியாதை செலுத்தும் விதமாக வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    • சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி திருநாளை விபத்து, ஒலி, மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசடைகிறது. மேலும் பட்டாசு ஒலி, மாசு காரணமாக குழந்தைகள், பெரியவர், நோய் பாதித்தோர் பெரும் பாதிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.

    எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தவிர குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம்.

    அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குடிசை பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
    • மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளைக்கொண்டு தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணைகளுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றது.

    இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.

    இந்த ரகமானது தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தால் 2022-ம் ஆண்டு ஆர்என்ஆர் ரகத்திற்க்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய சன்ன ரகமாகும். ஒரு எக்டருக்கு சராசரியாக 6500 கிலோ தர வல்லது.

    மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.

    இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைலர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள் , பயிர் விலகு தூரம், குறித்தறி–விக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவை–யான அனைத்து நடைமுறை–களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் கம்பெனி குடோனில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    சேலம் மாவட்டம் வீரக னூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் டிப்ளமோ படித்து விட்டு கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதயில் ஒரு கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும் பினார்.

    ஆனால் அப்போது இருந்தே சரியாக வேலை செய்ய முடியாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தாராம்.

    இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் நேற்று கம்பெனி குேடானில் திடீரென நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள், குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, அம்மாபேட்டை, கொடுமுடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    ஈரோடு மாநகர பகுதியில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு சென்னிமலை ரோடு சேனாதிபதி பாளையம், தொட்டிபாளையம் பிரிவு பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக அந்தப் பகுதியில் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியே செல்ல முடியாமல் சேனாதிபதி பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் ஊருக்குள் புகுந்தது. இதனால் சேனாதிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரம் தண்ணீர் அதிகரித்து வந்ததால் மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு, தீயணைப்பு வீரர்கள் சேனாதிபதி பாளையம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களை பத்திரமாக வெளியேற உதவி செய்தனர். 75 வீடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள மேடான பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு பள்ளியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விடிய விடிய அவதி அடைந்தனர். மேலும் தொட்டிபாளையம், பெரிய சடையம்பாளையம் பகுதிகளிலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களும் கடும் அவதி அடைந்தனர். வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது. கிராம பகுதி அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    கனமழை எதிரொலியாக வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல கிலோமீட்டர் சுற்றி மீண்டும் நகருக்குள் வந்தனர். இதேப்போல் கொடுமுடி, நம்பியூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்கனவே குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பெரும்பள்ளம் அணை முழு கொள்ளளவை நெருங்கிவிட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-64, கொடுமுடி-62, சத்தியமங்கலம்-58, பெருந்துறை-51, கொடிவேரி-45, சென்னிமலை-42, கவுந்தப்பாடி-39, வரட்டு பள்ளம்-36.60, ஈரோடு-33, தாளவாடி-30, கோபி-29, மொடக்குறிச்சி-26, அம்மாபேட்டை-17.80, பவானி-15.60, குண்டேரி பள்ளம்-15, பவானிசாகர்-7.60.

    • ரங்கம்மாள் தங்கியிருக்கும் ஓட்டு வீடு பெரும்பள்ளம் ஓடை பகுதி அருகே அமைந்துள்ளது.
    • தண்ணீரில் மூழ்கி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரி பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (65). இவரது கணவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்து விட்டார். மூதாட்டி ரங்கம்மாள் மட்டும் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். உறவினர்கள் சிலர் அவ்வப்போது ரங்கம்மாள் பாட்டியை பார்த்து வந்தனர்.

    ரங்கம்மாள் தங்கியிருக்கும் ஓட்டு வீடு பெரும்பள்ளம் ஓடை பகுதி அருகே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இவரது வீடு அருகே தண்ணீர் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் 2.30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் ரங்கம்மாள் தங்கி இருந்த வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் ரங்கம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். மழைநீர் அவர் வீடு முழுவதும் சூழ்ந்ததால் ரங்கம்மாள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இன்று காலை அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்ற போது ரங்கம்மாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு நாளை மாலை முதல் மிக அதிக அளவில் பயணம் செய்ய உள்ளனர்.

    தொலை தூர பயணத்துக்கு பொது மக்கள் ரெயில் பயணங்க ளை அதிக அளவில் தேர்ந்தெடுத்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள் ரெயிலில் கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாடு அல்லது வணிகரீதியாக ரெயில்களில் யாரேனும் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ரகங்கள் எடுத்து செல்கின்றனரா? என்று போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெயில் நிலைய நுழைவா யில் பகுதியில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். பட்டாசு ஏதேனும் உள்ளதா? என போலீசார் தீவிரமாக சோ தனை செய்து வருகின்றனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் வரும் ஒவ்வொரு ரெயில்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வரும் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    சோதனையின் போது பயணிகள் பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடி க்கப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • ஈரோடு மண்டலம் சார்பில் நாளை முதல் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி வரும் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகின்ற 25-ந் தேதி வரை 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 11 அரசு போக்குவரத்து கிளைகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையொட்டி கூடுதலாக 50 பஸ்கள் பயணிகளின் கூட்டத்தை பொருத்து இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×