என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோவை டி.ஐ.ஜி முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் மற்றும் கடம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்த 2 போலீஸ் நிலையங்களின் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கோவை டி.ஐ.ஜி முத்துசாமி வருகை புரிந்து திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று கோவை டி.ஐ.ஜி முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் மற்றும் கடம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த 2 போலீஸ் நிலையங்களின் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேற்படி போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர் வடிவேல், உதவி ஆய்வாளர்கள் மற்றும் இதர போலீசாரின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பங்களாபுதூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து பாராட்டினார். மேலும் ஆன்லைன் சூதாட்ட த்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சம்ம ந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், காவல் துறை பொதுமக்களின் நண்பனாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் சத்தியமங்கலம் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு சியாமளா தேவி உள்பட போலீசார் உடனிருந்தனர்.

    • பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. இதையடுத்து கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றுக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி உபரி நீர் பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானி ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறையினர் வருவாய் துறையினர் முகாமிட்டு அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.
    • இந்நிலையில் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் மாநில அளவில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.

    இவர்கள் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் ராகுல் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 400 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 5-வது இடமும், பின் தங்கிய வகுப்பு பிரிவில் 2-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கோகுலும் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 372 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ராகுல் சென்னை மெடிக்கல் கல்லுாரியிலும், கோகுல் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியிலும் சேர்ந்த்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் தங்கள் படித்த பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ உள்பட ஆசிரியர்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    • 3 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நம்பியூர், பொலவபாளையம், மலையப்பாளையம், எம்மாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது.

    கடந்த 19-ந் தேதி நல்லகட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவரது பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருடப்பட்டது சம்பந்தமாக வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் மனு கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் நம்பியூர் மற்றும் வரப்பாளையம் போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வரபா ளையம் மற்றும் நம்பியூர் போலீசார் மலைய ப்பாளையம் இந்திரா நகர் காலனி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் மற்றும் மலையப்பாளையம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதியை சேர்ந்த சேகர் (25) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் நல்ல பிள்ளை பெற்றான் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடி திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் பகுதியில் கறிக்கடையில் வேலை செய்து வரும் சங்கர் (28) என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து நேற்று நம்பியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் 3 வாலிபர்களையும் கைது செய்து கோபி 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
    • இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். 

    • அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
    • தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தாளவாடி மற்றும் பர்கூர் மழைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    பவானி, காவிரி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் குளிர்ச்சியாக மாறியது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்யாததால் இரவில் இருந்தே குளிருடன் பனிப்பொழிவும் இருந்து வந்தது. குறிப்பாக அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.

    இதனால் பவானி-மேட்டூர் செல்லும் மெயின் ரோட்டில் காலை 7 மணி வரை எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் காலை நேரத்திலும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டு வந்து சென்றது.

    கடும் குளிரால் மலை பிரதேசத்தை போல் ஈரோடு மாவட்டம் மாறி விட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போதே தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு படை எடுக்க மக்கள் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் குடும்பத்தி னருடன் தங்கி பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் நூற்றுக்க ணக்கான மக்கள் குவிந்தனர். மக்கள் சிரமம் இன்றி சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கும் பஸ்களை விட கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டன.

    இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் மக்கள் சிரமம் இன்றி செல்ல ஏதுவாக இருந்தது. இதேபோல் இன்று காலையும் ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    வெளியூர் செல்லும் பஸ்களில் குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை பஸ்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் தங்கள் குடும்பத்தி னருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் இன்று ஈரோடு ெரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை முதலே ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவுவாயில் பகுதியில் ெரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் யாராவது பட்டாசு கொண்டு செல்கி றார்களா? என்று தீவிரமாக ஒவ்வொரு பயணிகளின் உடைமை களை சோதனை செய்து அதன் பிறகே உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஒவ்வொரு ரெயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை உள்ள பகுதிகளில் இன்று கூட்டம் கடுமையாக இருந்தது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு ஜவுளி மார்க்கெட்டிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் விற்பனை சூடு பிடித்தது. இதேபோல் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு போன்ற கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடந்த ஒரு வாரமாக ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக போலீசார் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் மக்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
    • சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

    இதேபோல் குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதேப்போல் கவுந்தப்பாடி, கொடிவேரி, குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், மொடக்குறிச்சி, சென்னிமலை, நம்பியூர், பவானி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    சத்தியமங்கலம்-56, கவுந்தப்பாடி-40, அம்மா பேட்டை-40, கொடிவேரி-37, குண்டேரிபள்ளம்-29, நம்பியூர்-25, வரட்டுபள்ளம்-16, தாளவாடி-14, பவானி-12.80, மொடக்குறிச்சி-12.40, பவானிசாகர்-12, சென்னிமலை-2.

    • சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.

    இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவை யொட்டி வரும் 26-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து சுப்பி ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலு க்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதை தொடர்ந்து மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு காலை 10 மணிக்கு யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபி ேஷகமும் மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடக்கி றது.

    விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடிவாரத்தில் அருள் பாலிக்கிறார்.

    மேலும் இரவு 8 மணிக்கு சென்னிமலை 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி காலை சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    எனவே கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். அப்போது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராம நாதசிவாச்சாரியார் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கொள்ளையன் சுமார் 3 பவுன் மதிப்புள்ள பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எம்.டி.என்.புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சாந்தி (46). இவர் நேற்று மாலை கல்லூரி மாணவரான தனது மகனுடன் மொபட்டில் சென்னிமலை வாரசந்தைக்கு வந்தார். அங்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 7 மணி அளவில் தனது ஊருக்கு புறப்பட்டார். அவர்கள் சென்னிமலை-ஊத்துக்குளி ரோடு தொட்டம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மொபட்டில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென சாந்தி கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட சாந்தி நகையை பிடித்துக் கொண்டு கொள்ளையனுடன் போராடினார்.

    இதில் அவர் கீழே தவறி விழுந்தார். அந்த நேரத்தில் கொள்ளையன் சுமார் 3 பவுன் மதிப்புள்ள பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றான். கீழே விழுந்ததில் காயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
    • பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பத ற்கான தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகி க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை சூடுபடுத்தி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டில் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    ×